
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

நினைவதும் வாய்மை மொழிவது மல்லால்
கனைகழல் ஈசனைக் காண்பரி தாகும்
கனைகழல் ஈசனைக் காணவல் லார்கள்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.
English Meaning:
Adore the Lord and Behold HimYou can think of Him, you can speak of His Truth
But rare indeed to see the Lord of the Holy Feet;
They can but see the Lord of the Holy Feet
Who adore Him with flower and water.
Tamil Meaning:
சிவனை இலிங்கத்தின்கண் சதாசிவ வடிவில் வைத்து மேற்கூறியவாரெல்லாம் நினைதலும், அந்நினைவுகட்கு ஏற்ற மறை மொழிகளை அவ்வப்பொழுது முறையாகச் சொல்லுதலும், அவற்றோடு அவ்வவ்வுறுப்புக்களைப் பூவும், நீரும் கொண்டு போற்றுதலும் தவிர அவனைக் காண்பதற்கு வழி வேறில்லை. ஆகையால் அவனைக் காண வேண்டுவோர் பலரும் அவற்றையே செய்வர்.Special Remark:
`அதனால் நீவிரும் அவற்றையே செய்மின்` என்பது குறிப்பெச்சம். சொல் சுருங்க வேண்டி வேறு வேறாக ஓதினாரேனும் இவ்வாறு ஒன்றாக வைத்துரைத்தலே கருத்தென்க. `இலிங்கத்தில்` என்பதும், `சதாசிவவடிவில்` என்பதும் அதிகாரத்தால் வந்தியைந்தன. தாம் தம் பயனைத் தப்பாது தருதல் பற்றி மந்திரங்களை \\\"வாய்மை\\\" என்றார். நினைதல் முதலிய மூன்றும் முறையே மனம், மொழி, மெய் இவற்றின் செயலாதல் தெளிவு. எனவே முப்பொறிகளும் பூசையில் ஒருங்கு இயைதல் வேண்டும் என்பது பெறப்பட்டது. ஞான பூசையில் மொழி மெய் இவற்றின் செயல்களும் அவ்வாறே பாவிக்கப்படும் என்க.இதனால், சிவபூசை முப்பொறிகளாலும் இயற்றற்பாலதாதல் கூறப்பட்டது. இடையே சிவபூசையின் சிறப்பும் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage