
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப்
பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.
English Meaning:
Pray and Receive GraceThe devout are they with flower and water pray
The Lord seeing that bestows His Grace on them
Countless are the sinners that know not how our Lord to approach
Thus they slip by in ignorance deep.
Tamil Meaning:
(இங்கு இருக்க வேண்டிய இப்பாடல் பதிப்புக் களில் `மாகேசுர பூை\\\\u2970?` என்னும் அதிகாரத்திலும் அங்கு இருக்க வேண்டிய பாடல் இங்குமாக மாறியுள்ளன.)புகழ்மிக்க நந்தி பெருமானாகிய எம் ஆசிரியர் எம்மை ஆளாக ஏற்றுக் கொண்டுபோய்த் திருமுன்பு சேர்ந்த, `நந்தி` என்பதையே தன் பெயராக உடைய சிவபெருமானை என்னால் ஆம் அளவும் துதிப்பதற்கு அந்த `நந்தி` என்னும் பெயரையே எப்பொழுதும் சொல்வேன்.
Special Remark:
`இஃது எம் ஆசிரியர் ஆணை` என்றபடி, சிவபெரு மானுக்கு அவனது மூலமந்திரத்தில் உள்ள `சிவன்` என்பதே மெய்ப் பெயராயினும், அஃது அவனை வழிபடுவோர் யாவர்க்கும் பொதுவாய் நிற்க, அவரவரும் தம் தாம் தனித் தனிச் செய்யும் வழிபாட்டில் தம் பெருமானது மெய்ப்பெயராக ஒரு பெயரைக் கொள்ளுமாறு ஆசிரியர் பணிப்பர். அம்முறையில் நாயனார்க்கு அவர் வழிபடும் பெருமானது பெயராக `நந்தி` என்பதையே நந்தி பெருமான் அருளிச் செய்தார் என்க. இதனை நாயனார் எடுத்துக் கூறியதனால் சிவனைச் சிறப்பு வகையில் தமக்கே உரிய பெருமானாகக் கொண்டு வழிபடும்பொழுது அவனுக்கென்று ஒரு பெயரை அவரவரும் கொண்டு வழிபடல் வேண்டும் என்பது பெறப்பட்டது.\\\"விட்ட\\\" என்பது, `அரசன் ஆக்கொடுத்த பார்ப்பான்` என்பதிற்போல, `சடையன்` என்னும் கோடற் பொருட் பெயர் கொண்டது. வருமளவும், ஆமளவும், \\\"நொந்து\\\" எனச் சினைவினை முதல்மேல் நின்றது. `வருந்தியேனும் செய்வேன்` என்றதாம். `நந்தி யென்னும்பேர் பிதற்றொழியேன்` என்க.
இதனால், சிவபூசையில் இன்றியமையாது கொளற்பால தொன்று கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage