
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

உழைக்கவல் லார்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்(து) இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.
English Meaning:
Pray and ProsperYou that labour hard
Gather flowers and carry water pure;
Adore the Lord in unfailing piety
And at His shining Feet lay the flowers;
And stand and pray
And like the rain-laden clouds
Forever prosperous you shall be;
Tamil Meaning:
நீரும், பூவும் சுமந்து சென்று நோற்க வல்லவர் நடுவிலே நீவிரும் அமர்ந்திருந்து அவரைப்போல நீவிரும் சிவனிடத்தும் பெரிய தவத்தைச் சிறிதும் குற்றமறச் செய்தலில் கருத்துடையீராய் அவனது திருவடிகளில் பலவகைப் பட்ட மலர்களைத் தூவி, அன்புக் கண்ணீரைப் பொழிதலால் மழையைப் பெய்யும் மேகத்திற்கு ஒப்பாகும்படி அச்செயலில் நிலைத்து நில்லுங்கள்.Special Remark:
`மலர் ஏந்தி, மலர் தூவி`` என இருகாற் கூறினமையால் இதற்கு இவ்வாறுரைத்தலே கருத்தென்க. மெய்யன்பர் மெய்யன் பரையே ஏற்றுக்கொள்ளுதல் பற்றி, அவர் நடுவில் இருந்து பூசை செய்க` என்றார். அணிகலத்தை உணர்த்தும் `இழை` என்பது இங்குச் சிலம்பினைக் குறித்து நின்றது.இதனால் `மெய்த் தொண்டரின் உடன்படும் பூசையே பூசையாம்` என்பது உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage