
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.
English Meaning:
The Devolutes of BinduThe Bindu that thus arose pervades everywhere;
From it rises the Maya per se and the Mahamaya
And from them emanate the immortals and their clans
The Mantras and the Vedas too,
And the countless countless worlds swarming in the spread.
Tamil Meaning:
எல்லாக் காரியங்களின் தோற்றத்திற்கும் முதலாய் நிற்கின்ற பரவிந்துவே, பிற எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி வியாபகமாய் நிற்கும். அது மல கன்மங்களோடு விரவுதல் இன்றித் தூயதாயும் உள்ளது. அதனால் அது `மகாமாயை` எனவும் படுகின்றது. அஃது அபர முத்தர்களாகிய மந்திர மகேசுரர், அணுசதா சிவர் முதலியோருடைய தனு கரணங்களாகவும், சத்த கோடி மகா மந்திரங்களாகவும், வேத சிவாகமங்களாகவும் மேற்கூறியோருடன் மற்றும் விஞ்ஞான கலர்களும் வாழும் அளவற்ற அண்டங்களாயும் விளைந்து பயன்படும்.Special Remark:
``பரவிந்து என்பது, `காரிய விந்துக்களுக்கு மேலாய் நிற்கும் விந்து`` எனப் பொருள் தந்து காரணப் பெயராய்ச் சுத்த மாயையைக் குறித்தது. அதனையே சிவன் தான் நேரே தொழிற் படுத்துதலின் அதன் இயல்பை விரித்தார். `அதனால் சத்தியது பெருமை விளங்கும்` என்பது பற்றி, சுத்த மாயைக்குக் கீழ் உள்ள அசுத்த மாயையைச் சிவன் தனது ஏவல் வழி நிற்கும் அனந்தேசுரரைக் கொண்டும், பிரகிருதி மாயையை அவரது ஏவல்வழிச் சீகண்ட ருத்திரரைக் கொண்டும் செயர்படுத்துவன்.``தேவர்`` என்றது ஏற்புழிக் கோடலால் மேற்கூயோரைக் குறித்து, ஆகுபெயராய் அவரது தனு கரணங்களை உணர்த்திற்று. சிவாகமமும் வேதம் எனப்படும்.
இதனால் சுத்த மாயையினது சிறப்புக் கூறும் முகத்தால் திருவருளது ஆற்றற் பெருமை கூறப்பட்டது.
முன் அதிகாரத்தில் திருவருளின் இயல்பினை அதனைப் பெற்றார் உணருமாறெல்லாம் கூறிய நாயனார், அதனுள் திருவருள் மறைத்தலைச் செய்து இருளாயும் நிற்றல் கூறப்பட்டமையால் அஃது அதற்குச் செயற்கையேயாக, அதன் இயல்பு ஒளியேயாதலை அச்சிறப்புப் பற்றி இவ்வதிகாரத்தில் வேறெடுத்து ஒன்பது மந்திரங்களால் உணர்த்துகின்றார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage