
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவமசை யாகி நடிப்பவன் தானே.
English Meaning:
The Nine God Forms are of SivaSiva, Sakti, the luminous Nada and Bindu
The five-faced Sadasiva holy,
Mahesa, Rudra, Mal and the lotus-seated Brahma
—All these forms nine
He assumes.
Tamil Meaning:
சிவம் முதலாக உள்ள நவந்தரு பேதங்களாய் நிற்கும் சிவன் அங்ஙனம் நிற்றலும் திருவருளாலேதான்.Special Remark:
நவந்தரு பேதங்களாவன இவை என்பது மேல் `சிவலிங்கம்` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டது. அவ்விடத்தில் சிவலிங்கம் அனைத்துத் திருமேனிகளாயும் நிற்றலை விளக்குதற்கும், இங்குத் திருமேனி நிலைகள் அவை என்பதை விளக்குதற்கும் இவை கூறப்பட்டன. பின்னரும் ஓரோர்காரணம் பற்றி இவற்றை எடுத்துக் கூறுவார்.இவை `சொரூபமன்றித் தடத்தமே` என்றற்கு `நடிப்பவன்` என்றார். சிவஞான சித்தியிலும் இவ்வாறே கூறப்படுதல் காண்க.
இதனால், சிவன் அருளாற் கொள்ளும் திருமேனிகளின் வகைகள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage