
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

தலையான நான்கும் தனதரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கும் நீடுரு வாகும்
தொலையா இவைமுற்று மாய்அல்ல தொன்றே.
English Meaning:
Lord Alone Performs the Five ActsHimself creates; Himself preserves
Himself destroys; Himself obscures
Himself, all these He does
And grants Mukti after;
Himself the all-immanent Lord.
Tamil Meaning:
(மேல், `ஞான லிங்க` அதிகாரத்தில் ``நாலன கீழ`` என்னும் மந்திரத்தில் சிவன்மேல் வைத்துக் கூறிய மூவகைத் தடத்தத் திருமேனிகளையும், அவற்றைக் கடந்த சொரூப நிலையையும் இம்மந்திரத்தில் திருவருளாகிய சத்திமேல் வைத்துக் கூறினார் என்க.)Special Remark:
`திருவருளாகிய சத்திதானே சிவன்` என்பதை உணர்த்துதல் இதற்குப் பயன் என்க. அங்கு, ``பரசிவன்`` என உயர்திணை வாய்பாட்டானும், இங்கு, `அல்லது ஒன்றே` என அஃறிணை வாய்பாட்டானும் வாய்பாடு வேறு படுத்து ஓதிய நுட்பம் ஓர்ந்துணரற்பாற்று.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage