
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

காண்டற் கரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாய்த் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங் கிருளறு மாமே.
English Meaning:
Pray and receive Divine LightElusive is He for us to see;
Beyond our Thoughts is He, the Nandi,
Distant is He to touch and feel,
Pray long in the light of your heart,
The darkness that envelops you dispelled stands.
Tamil Meaning:
(சிவனை உயிர்கள் அனாதியில் ஒராற்றானும் உணர்தல் இல்லை.) பின்பு உலகியல் உணர்வானே ஏனைப் பொருள்களைக் காண்டல், கருதல், தீண்டல், பற்றுதல் இவற்றைச் செய்தல் செய்து பெறுதல் போல அவனை அவ்வுயிர் பெற முயன்றால், அவனும் அவ்வகையினால் எல்லாம் அவற்றால் எய்துதற்கு அறி யனாய், அவற்றிற்கு மிகத் தொலைவில் உள்ளவனாகியே நிற்பான். பின்பு ஒரு காலத்தில் அவனே விருப்பத்தை உடையவனாகிப் புறத்தே விளங்கும் இல்லக விளக்குப்போலும் 3 தன்மையுடன் அகத்தில் தானே நல்லக விளக்காய் நீங்காது நிற்றலால், அவ்விடத்துள்ள அறியாமையாகிய இருள் அற்றொழியா நின்றது.Special Remark:
என இதனையும், இனி வருகின்ற மந்திரங்களையும் திருவருள் வாய்க்கப் பெற்றார் அதனை உணர்ந்து மகிழ்ந்தெடுத்துக் கூறுவனவாக வைத்துரைக்க.``நந்தியும்`` என்னும் உம்மை இறந்தது தழுவி நிற்றலால், அதனால் தழுவப்பட்ட பொருள் வருவிக்கப்பட்டது. `விளக்கொளி` என்றது அதுபோலும் தன்மையை. ஆன் உருபு `கைப்பொருளொடு வந்தான்` என்பதில் உள்ளது போலும் ஒடு உருபின் பொருளில் வந்தது. `நெஞ்சத்துக்கண்` என ஏழாவது விரிக்க. ஈண்டுதல் - செறிதல். அது நீங்காது நிற்றலைக் குறித்தது. ``கிடந்து`` இரண்டில் பின்னது, `கிடத்தலால்` எனப்பொருள் தந்து நின்றது. ஆம். ஏ அசைகள்,
இதனால், சிவன் அனாதியில் உயிர்கள் பக்குவமின்றி நிற்றலால் அரியனாயினும் பக்குவம் எய்தி காலத்தில் எளியனாய் விளங்கும் அவனது அருள் நிலை போற்றியுரைக்கப்பட்டது. `அவ்வருட் பதிவானே முன்னை மந்திரத்துக் கூறிய அறமும், தவமும் தாமே நிகழும் என்பது கருத்து.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage