
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

நானறிந் தன்றே யிருக்கின்ற தீசனை
வானறிந் தார்அறி யாது மயங்கினர்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறி யான்பின்னை யார்அறி வாரே
English Meaning:
If I do not know Lord who else shall?I have known the Lord from days bygone
But the Celestials knew Him not,
Doubt-tossed were they;
The Lord is the Light
In my fleshy body as Prana pulsates
If I know Him not, who else will?
Tamil Meaning:
என்னுள் இருக்கின்ற இறைவனை அறிய வேண்டி யவன் யானே யன்றோ! (அந்நிலை இன்று யான் கைவரப் பெற்றேன்.) வானுலகம் ஒன்றையே அறிந்து நிற்கும் வானவர் அந்த அறிவால் தம்முள் இருக்கும் இறைவனை அறியாது மயங்குவாராயினர். ஒவ்வொருவனும் தனது உடம்பின் இயல்பையும், அந்த உடம்பினுள் உள்ள உயிரையும், அந்த உயிருக்குள் உயிராய் நின்று அதற்கு அறிவைத் தருகின்ற உள்ளொளியாகிய இறைவனையும் அறிந்து அவ்வாற்றால் பயன்பெற வேண்டியவன் அவனேயாய் இருக்க அவனவனும் அதனைச் செய்யாது கிடப்பானாயின் அவனுக்காக மேற்கூறியவைகளை யார் அறிவார்!Special Remark:
`திருவருட் பேறில்லாமையால் அவரெல்லாம் அங்ஙனம் மயங்கிக் கிடப்பர்` என்பது கருத்து.`ஈசனை அறிந்து இருக்கின்ற நானன்றே` என மாற்றியுரைக்க. இருக்கின்றது - `இருக்க வேண்டுவது` இது தொழிற்பெயராய், அத்தொழிலுடையதனை உணர்த்திற்று. ஊன் - உடம்பு; ஆகுபெயர். அதனைக் கூறவே, அதனுள் நின்ற உயிரும் கொள்ளப்பட்டது.
இதனால், திருவருட் பெறில்லாதாரது நிலைமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage