
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

ஆயும் அறிவோ டறியாத மாமாயை
ஆய கரணம் அடைக்கும்ஐம் பூதங்கள்
ஆய பலஇந் திரிய மவற்றுடன்
ஆய அனைத்துமாம் அவ்வரும் செய்கையே.
English Meaning:
Bounties of Lord`s GraceHe gave me the intelligence that reasons
He gave me the senses that Maya inscrutable fashions
He gave the five elements
And the diverse sense organs
And the Five Acts of Grace
—All these are but the bounties of His Grace.
Tamil Meaning:
`பெத்த நிலையில் உள்ள உயிர்களிடத்தும் திரு வருள் உளதாயினும் அது நேர்நிலை யன்று` என மேற்கூறிய இயை பானே, அஃது அத்திருகல் நிலையில் நின்று செய்வனவற்றை இங்கு நின்றும் விரிக்கின்றார்.மாயா காரியங்களைக் கருவியாகக் கொண்டு ஆராய்ந்து அறிந்து வரும் அறிவும், அக்கருவிகளும், அக்கருவிகளின் வழிப் புலன்களை ஆன்ம அறிவை அடையச் செய்கின்ற ஐந்து பூதங்களும் அப்புலன்களை நேராகவும், பிறவற்றின் வழியாகவும் கவர்கின்ற புற, அகப் பொறிகளும் ஆகிய அனைத்தும் திருவருளின் செயலால் ஆவனவேயாம்.
Special Remark:
``ஆயும் அறிவு`` என்றே ஓதினாராயினும் `அறிவு ஆராயும் ஆராய்ச்சியும்` என்பதே கருத்து. `கருவிகள் தலைக்கூடிய வழியும் திருவருள் இன்றி ஆன்ம அறிவு தனித்து நின்று ஒன்றையும் அறியமாட்டாது` என்பதனைச் சிவஞானபோத ஐந்தாம் சூத்திரத்தால் அறிக. `கருவிகள் சடம்` என்றற்கு அதனை அவற்றது முதல்மேல் வைத்து ``அறியாத மாமாயை`` என்றார். இதனுள் `மா` என்னும் அடை பிறிதின் இயைபு நீங்காது பொதுவில் இயைபின்மை மாத்திரை நீக்கி, மாயையின் வியாபகத்தை உணர்த்தி நின்றது. ஞானேந்திரிய விடயங்கள் பூதங்களின் குணமும், கன்மேந்திரிய விடயங்கள் அவற்றின் செயலும் ஆதல் பற்றி ``அடைக்குகம் ஐம்பூதங்கள்`` என்றும் கூறினார். `அனைத்தும் அவ்வருட் செய்கையே ஆம்` என மாற்றியுரைக்க. அவ்வருள் - மேற்கூறிய திருவருள்.இதனால், திருவருள் திரோதனகரியாய் நின்றே அனைத்துலகையும் ஆக்கும் முறைமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage