
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனு மாமே.
English Meaning:
Lord Alone Performs the Five ActsHimself creates; Himself preserves
Himself destroys; Himself obscures
Himself, all these He does
And grants Mukti after;
Himself the all-immanent Lord.
Tamil Meaning:
சிவபெருமானே எங்கணும் வியாபகனாய், ஐந் தொழிலையும் செய்யும் முதல்வனாயினும் அவன் அவன் அத்தன்மையனாய் நிற்றற்குக் காரணமாயிருப்பது அருளாயும், எல்லையின்றி விரிவதாயும், அனைத்தும் வல்லதாயும் அவனிடத்து உள்ள ஆற்றலேயாம்.Special Remark:
இங்கு, ``தான்`` எனப் பன்முறையானும் கூறியது இங்கு அதிகாரப்பட்டுள்ள அருளையேயாம். வியாபித்தலைவன் - வியாபி யாய தலைவன். படைத்தல் முதல் வியாபித்தல், தலைவனாதல் ஈறாக உள்ள அவை அனைத்திற்கும் ஏதுவாய் நிற்பதனை அவையாகவே உபசரித்துக் கூறினார். இதுவும் சொற்பொருட் பின் வருநிலையணி.இதனால் `திருவருளாவது` இங்குக் கூறிய அனைத்துத் தன்மைகளையும் உடைய சத்தியே, என்பது கூறப்பட்டது. ``அருள் உண்டாம் ஈசற்கு; அது சத்தி; அன்றே`` என்பது சிவஞான போதமும்,* ``அருளது சத்தியாகும் அரன்றனக்கு`` என்பது சிவஞான சித்தியும் சூ. 5. 9. ஆகும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage