
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்(டு)
அறிவது வாக்கி அடியருள் நல்கும்
செறிவோடு நின்றார் சிவமாயி னாரே.
English Meaning:
Various Acts of Lord`s GraceTo seek the Divine Light
He grants the light of knowledge;
He infuses the organs of sense
With desire
And leads you to enlightenment;
He then seats you
In the midst of the devout and holy;
They who His Grace thus received,
Verily became Siva themselves.
Tamil Meaning:
உயிர் அறிவுடையதாயினும் அவ்வறிவு ஆணவத்தால் தடுக்கப்பட்டமையின் அத்தடையை நீக்கி அஃது அறிவை அடையும்படி தொடுத்துப் பின்பு அவ்வறிவு பொறிகளின் வழிச் சென்று புலன்களை விரும்பிப் பாச அறிவாகும்படி செய்து, அவ்விடத்து அவ்வறிவு தான் விரும்பும் புலன்களை நுகர்தற்கு உடனாய் நின்று, பின்பு பாச அறிவாய் நின்ற அதனைப் பதியறிவாகச் செய்து, அவ்வாற்றால் பதிநிலையை எய்திய அடியார் குழாத்துள் இருக்க அருளுவதாகிய திருவருளை எய்தி அதுவே பற்றாக நின்றவரே சிவமாம் தன்மைப் பெருவாழ்வை எய்தினார்.Special Remark:
`பிறரெல்லாம் யாதும் இல்லா ஏழையராய் அலமரு கின்றார்` என்றபடி. `திருவருளே கேவல நிலையிற் கிடந்த ஆன் மாக் களைச் சகல நிலையிற் கொணர்ந்து, பின்பு சுத்த நிலையில் சேர்ப்பது` என அதனது உதவியை வகுத்தருளிச் செய்துமுகந்தான் அதனை உணரும் உணர்விலார் பயன் பெறாராதலை வலியுறுத்தியவாறு.`அறிவில் அறிவு நணுக நல்கி` என்க. இரண்டிடத்திலும், ``அறிவது`` என்னும் அது, பகுதிப் பொருள் விகுதி. செறிவு - எப்பொருளிலும் நிறைதல். அஃது ஆகுபெயராய் அதனையுடைய திருவருளைக் குறித்தது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage