
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

அருளின் பிறந்திட்(டு) அருளின் வளர்ந்திட்(டு)
அருளின் அழிந்(து)இளைப் பாறி மறைந்திட்(டு)
அருளான அவ்வந்தத்(து) ஆரமு தூட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.
அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந் தார்வமும் தந்திட்
டருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளால்என் நந்தி அகம்புகுந் தானே
English Meaning:
From Birth to Liberation — All Acts of GraceIn His Grace was I born,
In His Grace I grew up;
In His Grace I rested in death;
In His Grace I was in obfuscation;
In His Grace I tasted of ambrosial bliss;
In His Grace, Nandi, my heart entered.
More Acts of Grace
By His Grace was I bathed in the ocean of nectar,
By His Grace He rested His Feet on me
By His Grace He granted the fervour of devotion
By His Grace He fed me the bliss that is ambrosial
By His Grace, Nandi my heart entered.
Tamil Meaning:
யான் எம்பெருமானது திருவருளாற்றான் பிறந்தேன்; வளர்ந்தேன்; இறந்தேன். உலகம் ஒடுங்கிக் கிடந்த பொழுது யான் ஓய்வாக இருந்தேன்; மீட்டும் உலகம் தோன்றிய பொழுதும் பிறந்து வாழவே விரும்பினேன். இவ்வாறு முடிவின்றிச் சுழன்று வந்த யான் அவனது அருளே வடிவாகி நின்ற அந்த இறுதிக்காலத்தில் அப்பெருமான் எனக்கு எல்லையில் இன்பத்தை வழங்கி என் உள்ளத்தில் நீங்காது நின்றான் எல்லாம் அவனது அருளாலேதான் நிகழ்ந்தன.Special Remark:
`எல்லா உயிர்கட்கும் இவ்வாறுதான்; ஆயினும் அவ்வுயிர்கள் இவற்றை `என்னைப்போல முடிவில்தான் உணரும்` என்பது கருத்து. ``அருள்`` என யாண்டும் பொதுப்படவே ஓதினா ராயினும், `முதற்றொட்டு` ``மறைந்திட்டு`` என்பது காறும் கூறிய அருள் திருகுநிலை அருள் எனவும், `ஏனைய நேர்நிலை அருள் அறக் கருணை. முன்னது `திரோதான சத்தி` எனப்பட, பின்னதே `அருட் சத்தி` எனப்படும். `அருளின்` என்பதைப் பிறவற்றிற்கும் கூட்டுக.`அருளான ஆனந்தத்து` என்பது பாடம் அன்று.
இதன் பின்னர்ப் பதிப்புக்களில் காணப்படும். ``அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி`` என்னும் பாடல் இடைச்செருகல்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage