
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

அருட்கண் ணிலாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா
அருட்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்கிங் கிரவியும் தோன்றா
தெருட்கண்ணி னோர்க்கெங்கும் சீரொளி யாமே.
English Meaning:
Grace Gives Divine VisionThey whose eyes are blind
See not the sun even;
They that have vision divine
See the light everywhere;
They who have not the vision of Grace
See not the Lord that is Truth Subtle;
They that have the vision of Grace
See Hara face to face.
Tamil Meaning:
திருவருளாகிய கண் வாய்க்கப்பெறாதார்க்கு சிவமாகிய நுண்பொருளின் இருப்புத் தோன்றாது. உலகமாகிய பருப் பொருள்களின் விசித்திரங்களே தோன்றும். திருவருளாகிய கண் வாய்க்கப் பெற்றோர்க்கு, சிவனது இருப்பு மட்டுமன்றி அவனேயும் புலப்பட்டுத் தோன்றுவான். இவை எவைபோலும் எனின், ஒளி யில்லாத கண்ணை உடையவர்க்குப் பகலவனது ஒளிதானும் தோன்றாது இருள் மட்டுமே தோன்றுதலும், ஒளியுடைய கண் ணுடையார்க்கு அவனது ஒளிப்பரப்பேயன்றி அவனேயும் தோன்றுதல் போல்வனவாம்.Special Remark:
இஃது எடுத்துக்காட்டுவமை. `இருப்புத் தானும் அறிய வாராது` என்றற்கு, ``அரும் பொருள்`` என்றார். சிவனது இருப்பும், இரவியினது ஒளியும் அவை பற்றி நிற்கும் பொருள்களின் பன்மை பற்றிப் பன்மையாக ஓதப்பட்டன. அதனானே எண்பொருள், இருள் இவை மட்டுமே தோன்றுதல் பெறப்பட்டது. இருட்கண் - இருளை மட்டுமே உணரும் கண். ``இரவியும்`` என்னும் உம்மை இழிவு சிறப் பாகலின், ``இரவி`` என்றது ஆகுபெயராய் அதன் ஒளியைக் குறித்தது. தெருள் - ஒளி. எங்கும் உள்ள ஒளி முழுதும் தோன்றுதலால் அதனானே அவ்வொளிக்கு முதலாகிய இரவியும் தோன்றுதல் பெறப்பட்டது.இதனால், அருளில்லார்க்கு சிவம் தோன்றாது உலகமே தோன்றுதல் உவமையில் வைத்து விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage