ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி
    ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
    ஏய பரிய புரியுந் தனைஎய்தும்
    சாயும் தனது வியாபகந் தானே.
  • 10. புலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
    நலமையில் ஞான வழக்கமும் ஆகும்
    விலமையில் வைத்துள வேதியர் கூறும்
    பலமையில் எங்கும் பரந்துநின் றானே.
  • 11. விண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன்
    மண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும்
    தண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர்
    கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.
  • 12. நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
    நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என
    நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
    நின்றனன் தானே வளங்கனி யாமே.
  • 13. புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
    அவனேய உலகின் அடற்பெரும் பாகன்
    அவனே அரும்பல சீவனும் ஆகும்
    அவனே இறைஎன மாலுற்ற வாறே.
  • 14. உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும்
    விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
    மண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும்
    கண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.
  • 15. எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
    பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
    கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது
    உண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.
  • 16. இருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம்
    உருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம்
    கருக்கொடே எங்கும் கலந்துநின் றானே
    திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.
  • 18. அதுஅறி வானவன் ஆதி புராணன்
    எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
    பொதுஅது வான புவனங்கள் எட்டும்
    இதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.
  • 19. நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
    தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
    பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
    ஊரும் சகலன் உலப்பிலி தானே.
  • 2. நானறிந் தப்பொருள் நாட இடமில்லை
    வானறிந் தங்கே வழியுற விம்மிடும்
    ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
    தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.
  • 20. தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும்
    தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
    தானே உடல்உயிர் தத்துவ மாய்நிற்கும்
    தானே உலகில் தலைவனும் ஆமே.
  • 21. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
    மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம்
    மூலன் உரைசெய் முப்ப துபதேசம்
    மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.
  • 22. வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
    வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம்
    வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
    வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.
  • 3. கடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்(து)
    உடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின்
    உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக்
    கடலின் மலிதிரைக் காணலு மாமே.
  • 4. பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
    தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்
    இருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம்
    பரிந்துடன் போகின்ற பல்குரையாமே.
  • 5. உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும்
    இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும்
    சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
    பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.
  • 6. பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர்
    முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
    நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும்
    மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.
  • 7. தேவனு மாகுந் திசைதிசை பத்துளும்
    ஏவனு மாய்விரி நீருல கேழையும்
    ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும்
    நாவனு மாகி நவிற்றுகின் றானே.
  • 8. நோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும்
    காக்கும் அவனித் தலைவனும் அங்குள
    நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
    போக்கும் வரவும் புரணவல் லானே.
  • 9. செழுந்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி
    ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும்
    கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
    ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.