
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
பதிகங்கள்

அதுஅறி வானவன் ஆதி புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.
English Meaning:
He Knows All; But None Knows HimHe is Jiva`s knowledge,
He is the Ancient One,
Yet none know how He is;
In the universes eight all,
He knows all,
—He the Nandi, Our Lord Primal.
Tamil Meaning:
சிவனது பெருமை, உபநிடதங்களில் `அது` எனப் பொதுவாகச் சுட்டியும், `சித்து` என வரையறுத்தலும் கூறப்படுதலும், எல்லாப் பொருட்கும் ஆதியாயினும், தான் அநாதீயேயாதலும், எந்த அளவையினாலும் அளந்தறியப் படாமையும், உயிர்கள் பல வற்றிற்கும் பொதுப்பட இடமாய் விரிந்து உலகம் முழுதிலும் வியாபகம் ஆதலும் ஆகும். இன்னும் அவனது பெருமையை எல்லாம் எங்களுக்குக் குருவாகிய நந்தி பெருமான்தான் அறிவார்.Special Remark:
``பொதுவது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. எட்டும் - வியாபிக்கும். பெருமைகள் பலவாயினும் பொதுப்பட, `பெருமை` என்னும் அளவில் ``இது`` என்றார். ``ஈசன்`` என்பதை முதலில் கொள்க.இதனால் முடிவில் முதற்கண் குரு வணக்கம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage