
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
பதிகங்கள்

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.
English Meaning:
Long May They BeLong may they be, Long may they be, our Nandi`s Holy Feet!
Long may they be, Long may they be, the Feet of Him who severed Malas!
Long may they be, Long may they be, the Feet of Him of Divine Jnana;
Long may they be, Long may they be, the Feet of Him who has Malanone.
Tamil Meaning:
இது இறுதியில் வாழ்த்துக் கூறி நூலை முடிவு செய்தது. ``என் நந்தி`` என்றதனானே இது நாயனாரின் திருமொழியாதல் விளங்கும்.Special Remark:
இவ்வாழ்த்து இரட்டுற மொழிதலாகக் குருவையும், சிவனையும் ஒருங்கே வாழ்த்தியது. மலர் அறுத்தது நாயனார்க்கும் அவரோடு உபதேசம் பெற்றவர்கட்கும் என்க.முதற்கண், `சிவ பரத்துவம்` எடுத்துக் கொடுத்து இடையிலேயும், அதனையே பல்லாற்றானும் வலியுறுத்தித் தம் குருவையும், பல இடங்களில் நினைவு கூர்ந்து, ஈற்றிலும் சிவன் பெயரையே கூறிச் சிவன் திருவடியையன்றி, மறந்தும் பிறிதொன்றை நினையாது அவனது நெறியை விளக்கிய நாயனாரது திருமொழியின் அமைப்பையும், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்`` என்ற அவரது திருவுள்ளத்தையும் நினைந்து நினைந்து பயன் பெறுதல் அறிஞர் கடனாகும்.
ஒன்பதாம் தந்திரம் முற்றுப் பெற்றது.
பத்தாந் திருமுறையாகிய திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் தெளிவுரையும் இம்மூன்றாம் தொகுதியுடன் முற்றும் பெற்றன.
வாழ்க திருமந்திரம்! வளர்க சிவஞானம்!
திருமூல தேவநாயனார் திருவடிகள் வாழ்க! வாழ்க!
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage