
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
பதிகங்கள்

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாமே.
English Meaning:
His Limitless ExpansivenessHe stood as Brahma and Vishnu,
He stood as heaven and earth,
He stood stretching
To the farthest mountains and seas seven,
He stood as Ripe Rich Fruit too.
Tamil Meaning:
சிவன், முன் மந்திரத்திற் கூறியபடி உலகத்தைக் கடந்து அப்பால் மேலும், கீழுமாய், உலகத்தில் எல்லாப் பொருளுமாய் வியாபித்து நிற்றலால் `மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்களை அதிட்டித்துக் காத்தல் படைத்தல்களைச் செய்பவனும் அவனே. அதனால், எல்லாப்பொருள்களின் முழுத்தன்மையும் அவனே.Special Remark:
``தான் நிலம்`` என்பது தொடங்கி, ஈற்றடியில் ``நின்றனன்`` என்பது காறும் சென்று, பின், `அதனால், என்பது வருவித்து மாலோடு நான்முகன் தானாகி நின்றனன்; தானே வளங்கனியாம்` என முடிக்க. ``என`` என்பதை ``வரை, கடல்`` என்பவற்றோடும் கூட்டுக. கனி, கனிவு; முதிர்ச்சி முதனிலைத் தொழிற்பெயர். சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. இதன் கண்ணும் எழுவாய் முன் மந்திரத்திற்போல வந்தது.முன் மந்திரத்தில் `சிவனே எல்லாப் பொருளுமாய் நிற்பினும் மாலும், அயனுமாகிய காரணக் கடவுளரும் அவனேயோ` என ஐயுறுவார்க்கு அவ்வையத்தை நீக்குவார் முன் மந்திரத்திற்கூறிய பொருள்களையே மீண்டும் இம்மந்திரத்தில் அனுவதித்துக் கூறினார். இங்ஙனம் உரையாதார்க்கு இவை கூறியது கூறலாம். ``நாரணங்கான்; நான்முகன்காண்; நால்வேதன்காண்``2 என்னும் திருத் தாண்டகத்தையும் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage