
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
பதிகங்கள்

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.
English Meaning:
He Effected Union With JivaIn the orderly way of numerals and letters
The Lord created music and melody;
In His Glance, in His Thought, from within
He effected rapturous union of Jiva and Siva,
Into one Family united.
Tamil Meaning:
என் அறிவையும், எழுத்து அவ்வறிவின் வழி இன்பத்தையும் உண்டாக்குதல், அவையிரண்டும் இயற்றமிழில் அறிஞரால் ஓர் இனப்படுத்தி எண்ணப்பட்டன. (``எண் என்ப, ஏனை - எழுத்தென்ப``1 ``எண்ணெழுத் திகழேல்``2 ``எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்``3 என்பவற்றைக் காண்க.) இசைத்தமிழில் பண், திறம், (இன்னும் - திறத்திறம்) என்பனவும் அவ்வாறு ஓரினப்படுத்தி எண்ணப்படுவனவாம் இன்னோரன்ன பலவற்றை இனம், இனமாகப் படைத்த சிவபெருமானைக் கண்ணிலும், பொருள்களை உணரும் கருத்திலும் `அது` என்றும், `இது` என்றும் சேய்மைப் பொருளாகவும் அண்மைப் பொருளாகவும் தம்மின் வேறு வைத்து உணர்வார்க்கு அவன் அங்ஙனம் உணரும் உணர்வை, அவ்வுணர்வின் வழியே சென்று உணர்விற்கு உணர்வாய்த் தோன்றி அழித்து, `அவனே தாம் எண்ணும்படி ஒன்றாகியே நின்று, ஒப்பற்ற ஓர் ஊதியமும் ஆவான்.Special Remark:
``செயல்`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளை உணர்த்திற்று. `பண்ணும் திறனும் அவ்வழியவே` எனச் செயப்படு பொருள் வருவித்துரைக்க `கண்ணிலும் கருத்திலும்` என எண்ணும்மை விரிக்க. ``அது இது`` என்பது அவ்வாறு உணரும் உணர்வைக் குறித்தது. அஃது உம்மைத் தொகை. `அது இதுவை உருக்கி` என இயைக்க. ஆயம் - ``பொருளாயம்``1 ``ஆயும்`` என்னும் உம்மை சிறப்பு.இதனால், சிவன் எங்கும் சருவ வியாபியாய் நின்று, தன்னை உணர்வார்க்கு முன்னர் அவரின் வேறாகியும், பின்னர் அவரேயாகியும் பெரும்பேறாய் நிற்றல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage