ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கூடிய பாதம் இரண்டும் படிமிசை
    பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
    தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும்
    நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.
  • 10. கூறுமின் நூறு சதாசிவன் எம்மிறை
    வேறுரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
    ஏறுரை செய்தொல் வானவர் தம்மொடும்
    மாறுசெய் வான்என் மனம்புகுந் தானே.
  • 11. இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
    சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
    அருளார்ந்த நெஞ்சத்தெம் ஆதிப் பிரானைத்
    தெருளார்ந்தென் னுள்ளே தெளிந்திருந் தேனே.
  • 12. சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
    உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
    பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை
    தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே.
  • 13. நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும்
    தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
    காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
    மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே.
  • 14. நெஞ்சு சிரம் சிகை நீள்கவசம் கண் அம்பாம்
    வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
    செஞ்சுறு செஞ்சுடர்ச் சேகரி மின்ஆகும்
    செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே.
  • 15. எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
    விண்ணிற் பரைசிரம்மிக்க சிகைஆதி
    வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
    பண்ணும் கிரியை பரநேத் திரத்திலே.
  • 16. சத்தி நாற்கோணம் சலம்உற்று நின்றிடும்
    சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
    சத்திநல் வட்டம் சலம்அற் றிருந்திடும்
    சத்தி உருவாம் சதாசிவன் றானே.
  • 17. மானந்தி எத்தனை காலம் அழைப்பினும்
    தானந்தி அஞ்சில் தனிச்சுட ராய்நிற்கும்
    கானந்தி உந்தி கடந்து கமலத்தின்
    மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.
  • 18. ஒன்றிய வாறுஉம் உடலி னுடன்கிடந்து
    என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
    தென்றலைக் கேறத் திருந்து சிவனடி
    நின்று தொழுதேன்என் நெஞ்சத்தி னுள்ளே.
  • 19. உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
    கொணர்ந்தேன் குவலயம் கோயில்என் நெஞ்சம்
    புணர்தேன் புனிதனும் பொய்யல்லன் மெய்யே
    பணிந்தேன் பகல்அவன் பாட்டும் ஒலியே.
  • 2. வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன்
    மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
    ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
    சாதா ரணமாம் சதாசிவந் தானே.
  • 20. ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
    தாங்கிடும் ஈரேழுள் தான்நடு வானதில்
    ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம்என
    ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.
  • 21. தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
    தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
    தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம்
    தன்மேனி தானாகும் தற்பரன் றானே.
  • 22. ஆரும் அறியார் அகாரம் அவன்என்று
    பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
    தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
    ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.
  • 23. இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமாய்
    இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
    இலிங்கத்துள் வட்டம் இறையும் உகாரம்
    இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.
  • 3. ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
    ஆகின்ற சத்தியின் உள்ளெ கதிரெழ
    ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
    ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.
  • 4. அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
    அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
    அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
    அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.
  • 5. சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
    சமயத் தெழுந்த இராசியீ ராறுள
    சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள
    சமயத் தெழுந்த சதாசிவந் தானே.
  • 6. நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு
    நடுவு படிகம்நற் குங்கும வன்னம்
    அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
    அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே.
  • 7. அஞ்சு முகம்உள ஐம்மூன்று கண்உள
    அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள
    அஞ்சுடன் அஞ்சுஆ யுதம்உள நம்பிஎன்
    நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.
  • 8. சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
    சத்தி சிவம்மிக்க தாபர சங்கமம்
    சத்தி உருவம் அருவம் சதாசிவம்
    சத்தி சிவம்தத் துவம்முப்பத் தாறே.
  • 9.  தத்துவ மாவது அருவம் சராசரம்
    தத்துவ மாவது உருவம் சுகோதயம்
    தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
    தத்துவ மாகும் சதாசிவந் தானே.