
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

மானந்தி எத்தனை காலம் அழைப்பினும்
தானந்தி அஞ்சில் தனிச்சுட ராய்நிற்கும்
கானந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.
English Meaning:
Sakti in the First Three AdharasIn the quadrilateral Adhara (Muladhara)
Sakti in firmness stands;
In the hexagonal Adhara (Svadhishtana)
Sakti is in sleep;
In the circular Adhara (Manipuraka)
Sakti is in agitation;
Of Sakti`s Form is Sadasiva.
Tamil Meaning:
பெரியோனாகிய சிவனைக் கிரியையாளர்கள் எத்தனை முறை தம்பால் வருமாறு அழைப்பினும் அத்தனை முறையும் அவன் ஐந்து முகங்களையுடைய சதாசிவ லிங்கத்திடத்தே வந்து, ஒப்பற்ற ஒளிவடிவாய் நிற்பான். யோகிகள் சுவாதிட்டானத்தினின்றும் பிராண வாயுவை மேல் எழத்தூண்டி, மேலும் உள்ள ஆதாரங்களைக் கடந்தவழி, ஏழாந்தானமாகிய ஆயிர இதழ்த் தாமரையிடத்தும், அதற்குமேல் எட்டாந் தானமாகிய நிராதாரத்திடத்தும், அதனையும் கடந்த ஒன்பதாவதாகிய மீதானத்திடத்தும் விளங்குவான்.Special Remark:
`யோகிகட்கே சிவன் அகத்தில் விளங்கி, ஏனைக் கிரியையாளர்க்குச் சதாசிவலிங்கத்திலே விளங்குவான்` என்பதாம். எனவே, `கிரியையாளர்கள் சதாசிவ லிங்கத்திலே வழிபடுமாற்றால் அவனைக் காண்க` என்றதாயிற்று. ``நந்தி`` நான்கில் முன்னது பெயராயும், ஏனைய வினையெச்சமாயும் நின்றன. நந்துதல், இங்கு ஆக்கத்தின் மேற்று. கால் - காற்று, `கடந்தவழி` என்பது, ``கடந்து`` எனத் திரிந்து நின்றது. ``மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றான்`` என்றதனால், கமலம், ஆயிர இதழ்க் கமலமே ஆயிற்று.இதனால், சதாசிவ லிங்கம் கிரியை யாளர்க்கு இன்றி யமையாததால் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage