
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமாய்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்துள் வட்டம் இறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.
English Meaning:
Linga is AumThe Linga`s Holy Pedestal is the humming Omkara (Aum)
The Linga`s Centre part is filled with Akara (A)
The Linga`s inner round is with Ukara replete (U)
Linga is Bindu-Nada, Makaram (M) pervaded.
Tamil Meaning:
(முன்னை மந்திரத்தில், `ஓங்காரத்துள் சிவமும், சத்தியும் முறையே அகாரமும், உகாரமுமாய் நிற்பர், என்றதனால், அவ்விருவரது வடிவமுமாகிய இலிங்கம் ஓங்காரமாய் நிற்றல் எவ்வாறு` எனின்,) பீடம் சமட்டியான ஓங்கார வடிவேயாய் இருக்கும் இலிங்கம். ஒவ்வொரு கூற்றில் ஒவ்வோர் எழுத்தாய் வியட்டியாய் இருக்கும். அவற்றுள் பீடத்தின் உள்ளே மறைந்து நிற்கும் பகுதி மகாரமாயும், பீடத்தோடு இணைந்து வெளியே புலனாகி நிற்கின்ற பொருத்துவாயாகின்ற வட்டம் உகாரமாயும், இலிங்கம் கீழ் நின்று முக்கூறுபட்டு முறையே அகாரமும், விந்துவும், நாதமுமாய் இருக்கும்.Special Remark:
`இலிங்க நற் கண்டம் மகாரமாய் நிறையும்; இலிங்கத்து உள்வட்டம் உகாரமாய் நிறையும்` என ஆக்கச் சொல்லை ஏனையிரண்டிற்கும் கூட்டி, மொழிமாற்றி உரைக்க. பின்பு, `இலிங்கம் அகாரம், நிறைந்து விந்து, நாதம் ஆம்` என்க. கண்டம் - கூறு, பீடத்துள் மறைந்து நிற்பது தனி ஒருபகுதியாய்ப் புலனாகாது நிற்றல் பற்றி அதனை, ``கண்டம்`` என்றும், பீடத்தின் விளிம்பு வெளிவட்டம் ஆதலின், அதன் நடுவில் இலிங்கம் பொருந்தி நிற்கின்ற பொருத்து வாயை ``உள்வட்டம்`` என்றும் கூறினார்.இறைவனது உபசார வடிவங்களில் மந்திர வடிவம் சிறந்த தாதல் பற்றி அதனை முன்னை மந்திரத்துட் கூறி, அவ்வாற்றானே இலிங்கமும் மந்திர வடிவாதலை இம்மந்திரத்துட் கூறினார். புறத்து உள்ள இலிங்கம் இவ்வாறு மந்திர வடிவாதலைக் கூறியதனானே அகத்திலும் இலிங்கம் அவ்வாறே கொள்ளப்படுதல் பெறப்பட்டது. படவே, இவ்விரண்டு மந்திரங்களும் வருகின்ற அதிகாரத்திற்குச் சிறந்த தோற்றுவாய் ஆயினமை காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage