
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

ஒன்றிய வாறுஉம் உடலி னுடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தென்றலைக் கேறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன்என் நெஞ்சத்தி னுள்ளே.
English Meaning:
Sakti in the First Three AdharasIn the quadrilateral Adhara (Muladhara)
Sakti in firmness stands;
In the hexagonal Adhara (Svadhishtana)
Sakti is in sleep;
In the circular Adhara (Manipuraka)
Sakti is in agitation;
Of Sakti`s Form is Sadasiva.
Tamil Meaning:
எங்கள் சிவபெருமான் தக்க முறையில் உங்களுடைய உடலின் உள்ளே பொருந்தி என்றும் விளங்குகின்ற முறை முன்னை மந்திரத்தின் பிற்பகுதியிற் கூறியவாறாகும். அதனால் நான் சிவனது திருத்தமான பாதங்கள் எனது அழகிய தலையிலே பொருந்துதற் பொருட்டு உள்ளத்துள் நின்றே வணங்கினேன்.Special Remark:
நீவிர் அது மாட்டீர் ஆகலின், மேற்கூறியவாறு சதாசிவ லிங்கத்தில் சிவனைக் கண்டு வழிபடுங்கள்` என்பதும், `அவ்வாறு வழிபட்டுவரின் என்னைப் போல நெஞ்சத்தினுள்ளே நின்று தொழும் நிலையை எய்துவீர்` என்பது குறிப்பெச்சம். ஒன்றியவாறு - தக்கவாறு. `அந்த அந்த ஆதாரங்கட்கு ஏற்ப` என்றபடி. யோகத்தால் `தூய்மை பெற்ற தலை` என்பர், ``தென்தலை`` என்றார். தென் - அழகு. `சிவனது திருவடி தலைமேல் ஏற` என்றது, `ஞானம் உண்டாக` என்றபடி.இதனால், `சதாசிவலிங்க வழிபாடு பின்னர் உளதாகும் ஆன்மலிங்க வழிபாட்டைத் தரும்` என்பது கூறப்பட்டது. இனி இங்கு நின்றும் ஆன்மலிங்க வழிபாட்டின் சிறப்பையே கூறுகின்றார். `அதனைப் பெறுதற்குச் சதாசிவலிங்க வழிபாட்டைக் கடைப்பிடிக்க` என வலியுறுத்தற் பொருட்டு. இவ்வாற்றால் இனிவரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் அமைகின்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage