
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம்
தன்மேனி தானாகும் தற்பரன் றானே.
English Meaning:
The Lord is uncreatedHe stands,
His Form as Uncreated Siva Linga
His Form as Sadasiva Divine
His Form as Sivananda, bliss unalloyed
His Form as Tat-Para Eternal Supreme.
Tamil Meaning:
அகவழிபாடு செய்பவனுக்கு அவனது உடம்பே சதா சிவமூர்த்தியாயும், அம்மூர்த்தி மானாயும் நிற்கும். இன்னும் அது சுத்த சிவனாயும், அச்சிவனது ஆனந்தமாயும் நிற்கும். அஃது இவ் வாறெல்லாம் ஆகும்படி சிவன் அவனது உடம்பே தானாய் விளங்கி நிற்பான்.Special Remark:
`அகவழிபாடு செய்வான்` என்பது அதிகாரத்தால் கொள்ளப்பட்டது. சதாசிவனையும், சுத்த சிவனையும் உணர்ந்து, அவ் வுணர்வானே சுத்த சிவனது ஆனந்தத்தைப் பெறுதற்கு வாயிலாதல் பற்றி உடம்பை அவையெல்லாமாகப் பாற்படுத்து அருளிச் செய்தார். மானுடராக்கை வடிவு சிவலிங்கம்`` என்னும் மந்திரத்துட் கூறியன பிண்டம் இலிங்கமாதலைக் குறித்தற்கும் இங்குக் கூறியன அகவழி பாட்டின் சிறப்பினை உணர்த்துதற்கு கூறப்பட்டன ஆகலின், இவை கூறியது கூறல் ஆகாமை அறிக. தற்பரன் - தனக்கு மேலே உள்ளவன்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage