
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழுள் தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம்என
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.
English Meaning:
The Lord is the Source of Light and Energy for Sun, Moon and FireTo Sun, Moon and Fire
He lends His fiery rays:
The seven worlds twice he supports;
And in the Centre of Spaces Vast
He stands,
He is the Beginning, He is the End,
His own Form, cool as moon.
Tamil Meaning:
உடம்பின்கண் ஒன்றின்மேல் ஒன்றாய் உள்ள அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் என்னும் மூன்றிலும் நெருப்புப் போன்ற ஒளி வீச, `சிவனது பேதம் ஒன்பதுள் நடுவணதாகிய சதாசிவ மூர்த்தத்தில் உலகத் தோற்றமும், ஒடுக்கமும் நிகழ்வன` என்று உணர்ந்து நின்றால், அந்தச் சதாசிவ மூர்த்தமும், உலகத்தோற்றமும், ஒடுக்கமுமாய் நிற்கின்ற சத்தி, அவ்வுணர்ச்சியை உடையவனது உடலில் சந்திரன் போல ஒளிவிட்டு நிற்கும்.Special Remark:
``உடல்`` எனப் பின்னர் வருதலின் ``ஆங்கு`` என்னும் சுட்டுச் செய்யுளின் முதற்கண் நின்றது தாங்குதலுக்கு, `சிவன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``வீசிட`` என்னும் எதிர்கால வினை யெச்சம். ``என`` என்பதின் சொல்லெச்சமாய் நிற்கும் `உணர` என் பதனோடு முடிந்தது. உணர்தல், இங்கு, தியானித்தல். இவற்றை உடைய சத்தியை ``இவை`` என்றது பான்மை வழக்கு. `இவற்றால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. ``இந்துவும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage