
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயில்என் நெஞ்சம்
புணர்தேன் புனிதனும் பொய்யல்லன் மெய்யே
பணிந்தேன் பகல்அவன் பாட்டும் ஒலியே.
English Meaning:
Sadasiva is realized in the BodyThe shining Truth He is
Him I realized in this world below;
Into my heart`s temple here on earth
I brought Him, lo!
Him in union I embraced and prayed
Truth it is, pure and simple;
To Him, the Sun Resplendent, I sang
To music and to measure appropriate.
Tamil Meaning:
ஒளிப் பொருளாகிய சிவனை நான் அத் தன்மையனாக இவ்வுலகிற்றானே உணர்ந்தேன். பின்பு அவனை இவ்வுலகத்திற்கே வருமாறு கொணர்ந்தேன். பின் என் மனமே கோயிலாக அவனைக் கூடினேன். அதனால் அவன் இல்லாதவன் அல்லன்; உண்மையாக உள்ளவனே. நாளெல்லாம் நான் பாட்டும், ஒலியுமாக அவனைப் பணிதலையே செய்கின்றேன்.Special Remark:
உணர்ந்தது, ஆசிரியர் மொழியாற் கேள்வியினால் ஆகும். பின்பு முன் உணர்ந்தவாறு உள்ளத்தே வைத்து நினைக்க, அவன் நினைவிலே விளங்கிநிற்றலால், ``குவலயம் கொணர்ந்தேன்`` எனவும், ``என் நெஞ்சம் கோயிலாகப் புணர்ந்தேன்`` எனவும், `இங்ஙனம் அவன் எனக்கு அனுபவப் பொருளாகவே இருத்தலால் ``பொய்யல்லன் மெய்யே`` எனவும் கூறினார். ``பொய்யல்லன்; மெய்யே`` என்றது, `இறைவன் என்று ஒருவன் உளனோ` என ஐயுறுவாரை நோக்கிக் கூறியது. ``நெஞ்சம்`` என்பதன் பின் `ஆக` என்பதும், ``ஒலி`` என்பதன்பின் உம்மையும், `ஆக` என்பதும் விரிக்க. ``பகல்`` என்பதன்பின் `எல்லாம்` என்பது எஞ்சி நின்கின்றது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage