
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும்
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.
English Meaning:
Sadasiva form with Five FacesHis twin Feet are planted on earth below;
The ten hands, the holy in praise sing,
In directions all spread;
Five His Faces that are sought,
Five times three his eyes fiery;
Thus is Sadasiva that you seek
The Pearl that is lustrous, beyond, beyond compare.
Tamil Meaning:
சதாசிவ வடிவம் இரண்டு திருவடி, பத்துக் கை, ஐந்து முகம், முகம் ஒன்றற்கு மூன்று கண்களாகப் பதினைந்துகண் இவற்றை உடையதாகும்.Special Remark:
கூடிய பாதம் - இணைந்து காணப்படும் பாதம். படி மிசை பாடிய - உலகத்தில் புகழ்ந்து போற்றப்படுகின்ற. கண் அருளைப் பொழிதலால் சத்தியாதல் பற்றி ``கயல்`` என்றார். `சதாசிவமாகிய நல்ல ஒளியும், முத்துமாய தன் வடிவம்` என்க. ஒளியும், முத்தும் ஆகு பெயர்கள். நல் ஒளி` என்றதனால் இம்மூர்த்தம் ஒளியுருவே யாதல் விளங்கும். முத்து, மாணிக்கம், வயிரம் என்பன உயர்த்துக் கூறும் சொற்களாதல் வழக்கு, நோக்கியறிக.இதனால் சதாசிவ லிங்கத்தின் வடிவு கூறப்பட்டது.
``நாலுகொ லாம்அவர் தம்முக மாவன`` -தி.4 ப.18 பா.4
எனவும்,
``அஞ்சினாற் பொலிந்த சென்னி அதிகைவீ ரட்ட னீரே``
-தி.4 ப.26 பா.5
எனவும் அப்பர் அருளிச் செய்தன இச் சதாசிவ மூர்த்தத்தை நோக்கியேயாம்.
``சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி`` -தி.6 ப.32 பா.6
``மனோன்மனியைப் பெற்ற - தாயிலான்`` -தி.5 ப.91 பா.1
என்ற அவரது திருமொழிகளையும் நோக்குக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage