
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம்மிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவம்தத் துவம்முப்பத் தாறே.
English Meaning:
Sakti is the Kinetic and Siva the potentialAspects of God-head
Sakti is this wide world
Sakti is this universe vast
Sakti-Siva conjoint is the Kinetic and Potential
Sakti is the Formed;
Siva the Formless;
Sakti-Siva Tattvas are six and thirty true.
Tamil Meaning:
அண்டலிங்கத்துள் பூமி பீடமாயும், வானம் பீடத்தின்மேல் உள்ள இலிங்கமாயும் அமையும். (எனவே, சதாசிவ லிங்கத்துள் பீடத்தில் பூமியும், இலிங்கத்துள் வானமும் அடங்கு வனவாம்.)இனி இறைவன் உயிர்கள் பொருட்டுக் கொள்கின்ற `தாபரம், சங்கமம்` என்னும் இருவகை வடிவங்களுள் தாபரம் சிவக்கூறும், சங்கமம் சத்திக்கூறும் ஆகும். (தாபரம் - பெயர்ந்து நிற்பன; திருவுருப் படிமங்கள். சங்கமம் - உலாவுவன; அடியார்கள்.)
இறைவன் கொள்கின்ற திருமேனிகளில் உருவத் திரு மேனிகள் சத்திக் கூறும், அருவத் திருமேனிகள் சிவக்கூறும் ஆகும்.
Special Remark:
`சிவக்கூறும், சத்திக் கூறும் சமமாக விரவியதே, சதாசிவம் ஆகையால், அது மேற்கூறிய அனைத்துமாய் நிற்கும்` என்றவாறு, `தத்துவம் முப்பத்தாறு` எனப் பொதுவகையால் சதாசிவ தத்துவமும் அடங்கக் கூறினாராயினும் அதனைச் சிறப்பு வகையால் வேறு வைத்து உணர்த்துதலே கருத்தென்க. ``சதாசிவம்`` - இரண்டில் முன்னது இலிங்கத்தைக் குறித்தது. பின்னது, சிவம்` என்னும் அளவாய் நின்றது.`பருமை, நுண்மை என்னும் இருவகைப் பொருள்களில் பருமை யெல்லாம் சத்திக் கூறும், நுண்மை எல்லாம் சிவக்கூறும் ஆகும்` என்பது இதனால் உய்த்துணரக் கூறினமை காண்க.
``தாபர சங்கமம்`` - என்றது எதிர்நிரல் நிறை. `சங்கம தாபரம்` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.
இதனால் சதாசிவ லிங்கத்தினது சிறப்புக் காரண வகையால் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage