
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

ஆரும் அறியார் அகாரம் அவன்என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.
English Meaning:
The Lord is uncreatedHe stands,
His Form as Uncreated Siva Linga
His Form as Sadasiva Divine
His Form as Sivananda, bliss unalloyed
His Form as Tat-Para Eternal Supreme.
Tamil Meaning:
சிவன் அகாரமாயும், சத்தி உகாரமாயும் நிற்க, அவ்விரண்டும் கூடி ஓகாரமாகும். அந்த ஓகாரம் உலக முழுதும் பரவி, உள்ளத்தினின்றும் எழுகின்ற எல்லா எழுத்துக்களுமாய் ஒலிக்கும்.Special Remark:
`அதனால் அந்த ஒகாரத்தை உன்னலே சிறப்புடைய வழிபாடாகும்` என்பது குறிப்பெச்சம். `பீசாக்கரங்கள் அனைத்திலும் மகாரம் சேர்ந்து வருதல் இயல்பாகலின், அனைத்து மந்திரங்கட்கும் பொதுப் பீசமாகிய ஓகாரத்தோடு அது சேர்ந்து நிற்றல் சொல்ல வேண்டா` என்று போயினார். பாரும் - அறிமின். இதனை ``நாயகி`` என்பதன் பின்னர்க்கூட்டுக. `தாரகம்` என்பது இடைக் குறைந்து நின்றது. தாங்குவது, என்னும் பொருட்டாய்ப் பிறமந்திரங்கள் அனைத்திற்கும் அடிநிலையாவது` என்னும் கருத்தினைத் தருவது `இரண்டும் தாரகம்` என மாற்றியுரைக்க. `எழுத்து` என்பது, `எழுது` என்பது அடியாகப் பிறக்குமாயினும் உள்நின்று, `எழு` என்பது அடியாகப் பிறப்பது - என்றலும் பொருந்தும் ஆகலின், ``எழுந்திடும்`` என்றது எழுத்துக்களின் பிறப்பைக் குறித்து நின்றதாம். ``மாறி எழுந்திடும்`` என்பது பாடம் அன்று. இதனுள் ரகரத்திற்கு றகரம் ஓராற்றால் இன எதுகையாயிற்று.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage