
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

அஞ்சு முகம்உள ஐம்மூன்று கண்உள
அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள
அஞ்சுடன் அஞ்சுஆ யுதம்உள நம்பிஎன்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.
English Meaning:
Sadasiva`s FormFive His Faces thrice five His eyes;
Twice Five His hands number,
Five and Five Weapons He holds;
Thus my dear Lord, my heart entered
And in fullness pervaded.
Tamil Meaning:
இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துட் கூறிய வற்றுடன் பத்துக் கைகளிலும் பத்துப் படைக்கலங்களையுடைய சதாசிவ லிங்கமாய்ச் சிவன் என் இருதயத்துள் வந்து புகுந்து நிறைந்து நிற்கின்றான்.Special Remark:
சதாசிவ லிங்கமே தமது தியானப் பொருளாதலைக் கூறுவார் மேற்கூறிய அவற்றுடன் பத்துக் கைகளிலும் பத்துப் படைக் கலங்கள் இருத்தலை இங்குக் குறித்தருளினார். ``உள`` என்னும் பெய ரெச்சக் குறிப்புக்கள், `உடைய என்னும் பொருளவாய் அடுக்கி, `நம்பி` என்னும் ஒருபெயர்கொண்டன. அப்படைகள் பத்தாவன வலக் கைகள் ஐந்திலும், `சூலம், வச்சிரம், வாள், மழு, அபயம்` என்பனவும், இடக்கைகள் ஐந்திலும் பாம்பு, பாசம், அங்குசம், நெருப்பு, வரதம்` - என்பனவுமாம். அபய வரதங்கள் ஆயுதம் அல்லவாயினும் பெரும் பான்மை பற்றி ``ஆயுதம்`` என்றார். புதிதாய்ப் புகுந்தது போலக் கூறினாராயினும், `முன்பு விளங்கா திருந்தது விளங்கிற்று` என்பதே கருத்தென்க. மக்களுட் சிறப்புடையாரைக் குறிக்கும் `நம்பி` என்பது, தேவர்கட்குத் தலைவனாகிய சிவபிரானுக்கும் சொல்லப் படுதல் நம்பி என்னும் திருப்பதிகத்தாலும் அறிக. (தி.7 ப.63)இதனால் தமது தியானப்பொருள் சதாசிவ லிங்கமாதல் கூறப்பட்டது. அதனால், `பிறரும் அதுகொள்க` என்றதாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage