
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு
நடுவு படிகம்நற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே.
English Meaning:
The Five Faces of Sadasiva and their HuesCentral, East, South, North and West
These the Five Faces of Sadasiva;
The Central Face is of crystal hue;
The Eastward Face is crimson unto Kum-Kum
The Southward Face is dark like thick pitch
The Northward Face is red like Aratham flower
The Westward Face is white like milky hue;
Thus did He reveal to me,
His lowly vassal.
Tamil Meaning:
இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துள், `சதாசிவ லிங்கத்திற்கு ஐந்து முகங்கள் உள்ளன எனக் கூறிய முகங்கள் ஒரு வரிசையில் இல்லாமல், நடுவு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு` என்னும் திசைகளில் பொருந்தியுள்ளன.அவற்றுள் நடுவண் உள்ள முகம் படிகம் போன்ற நிறத்தையும், கிழக்கில் உள்ள முகம் குங்குமம் போன்ற நிறத்தையும், வடக்கில் உள்ள முகம் செவ்வரத்தம் பூப்போன்ற நிறத்தையும் மேற்கில் உள்ள முகம் பால்போன்ற நிறத்தையும் உடையன.
(கிழக்கில் உள்ள முகம் பொன் போன்ற நிறத்தை யுடையதாகச் சொல்லப்படுதலால், இங்கு, ``குங்குமம்`` என்பதற்கு, `கலவைச்சாந்து` எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும்.)
இந்த ஐந்து முகங்களுடன் தோன்றியே சிவன் அடியேனுக்கு அருள்புரிந்தான்.
Special Remark:
சைவாகமங்களில் சொல்லப்பட்டதனை நாயனார் தாம் அனுபவமாக உணர்ந்தமையை இங்கும் எடுத்துக் கூறினார். இதனானே பிறவும் உண்மையாதல் தெளிவித்ததாம், முதற்கண் கூறியவாறே ``நடுவு`` எனத் தொடங்கினமையால். ஏனை முகங்களும் மேற்கூறிய அம்முறையவாயின.இதனால் சதாசிவ லிங்கத்து முகங்களின் இடமும், நிறமும் கூறப்பட்டன. ``நிறங்கள் ஓர் ஐந்துடையாய்`` எனத் திருவாசகத்துள் கூறப்பட்டது இங்குக் கூறிய முகங்களின் நிறம் நோக்கியேயாம். (தி.8 சிவபுராணம் - 49)
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage