
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பதிகங்கள்

நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே
உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.
English Meaning:
Tamil Meaning:
(`இம்மந்திரம் அதிகப்படியாக உள்ளது` எனப் பதிப்புக்களில் குறிக்கப்பட்டபோதிலும் இங்கு இருத்தற்குரியதே.)மோன சமாதியை அடைந்தோர் பின்பு உலகத்தில் ஒன்றோ டொன்று மாறுபட்ட செயல்களைச் செய்தபோதிலும் திருவருள் உணர்வு சலியாது நிற்றலால் சிவஞானம் திரிபெய்தல் இன்மையால் சிவானந்தா -னுபவமும் குறையாது. அவர்கட்கு இனிப் பிறப்பும் இறப்பும் இல்லை இஃதே நிருவிகற்ப சமாதியாகிய நிட்டை நிலையாம்.
Special Remark:
``சற்று`` என்பதன்பின் `சற்றும்` என உம்மை விரித்து, ``பேராமல்`` என்பதற்கு முன்னே கூட்டுக. `தங்குதலால் பிறப்பற்றது` என்க. ஒளிர்தல், மாசற்று விளங்குதல். ``நிட்டை`` என்பதன்பின், `ஆம்` என்பது வருவித்து முடிக்க.இதனால், மோன சமாதியை முற்றப்பெற்று நின்றோர் உலகியல் தாக்குதலால் சலித்தல் இல்லை` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage