
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பதிகங்கள்

விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.
English Meaning:
Merging into SpaceUndistracted, I sit aloof and meditate,
Doubt-free, I follow the ancient Vedas,
I cross the awesome waste, this life is,
And beyond into the Space, that defies imagination, I merge.
Tamil Meaning:
விதறு படுதல் - சோர்வு உண்டாதல். `வேறு ஆய்ந்து, இருந்து ஆய்ந்து` எனத் தனித்தனி இயையும். வேறு - முன் மந்திரத்திற்கூறிய அதற்கு வேறாக. இருந்து - மனம் ஒதுங்கியிருந்து. பதறு படுதல் - பதற்றம் உண்டாதல். ``பதறு படாதே`` என்றதும் ``இருந்து`` என்றதை வலியுறுத்தியதேயாம். மறை - மந்திரம். ``பழ மறை`` என்றது, `முதல் மந்திரம்` என்றபடி. அது திருவைந்தெழுத்தே.Special Remark:
``ஆதி மந்திரம் அஞ்செழுத்து``8எனச் சேக்கிழாரும் அருளிச்செய்தார். பார்த்தல் - பொருளை ஊன்றி உணர்தல். பார்த்து - பார்த்தலால். `பார்த்தலால், கடந்து ஒடுங்கு கின்றேன்` என்க. ``பாழ்`` என்பது, `பயனற்றது` என்னும் பொருட்டாய், உலகியலைக் குறித்தது. கதறுதல் - துன்புறுதல் கூடாததனைக் கூடுவதுபோல் மனத்தாற் கருதிக்கொள்ளும் இன்பம் இல்லாத உலகியலை, `இதில் இன்பம் விளையும், விளையும்` என்று கருதி, விடாது பற்றி நிற்றல் பற்றி, அதனை, ``அந்தக் கற்பனை`` எனச் சுட்டிக் கூறினார். உலகியலை உதறிய பாழாவது, மாயையின் தொடர்பு சிறிதும் திருவருள் வியாபகம். `அதில் நான் முன்பு போல இன்றி ஒடுங்குகின்றேன்` என்க.
இதனால், குண்டலி யோகத்தால் பக்குவம் எய்திய உணர்வினால் திருவைந்தெழுத்தின் பொருளை உணர உணரத் திருவருள் வியாபகத்தில் ஒடுங்கியிருக்கும் மோன சமாதி கூடும்` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது. `மேற் கூறியது யோக நிலை` எனவும், `இது ஞான நிலை` எனவும் உணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage