
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பதிகங்கள்

நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.
English Meaning:
Jiva Light Merges in Siva LightNandi He was, in Street-Centre (of Sahasrara),
Samadhi and other ways of union, of themselves went
Into the Light, within navel centre rises,
By my Jnana, I merged.
Tamil Meaning:
சிவன் நடுத் தெருவிலே வெளிப்படையாகத்தான் இருக்கின்றான். (ஆயினும், இருள் மூடியிருப்பதால் அவனைக் காண இயலவில்லை.) பின்பு அந்த நடுத் தெருவின் முதலில் எரிகின்ற ஒரு விளக்கை எனது அறிவுக் கூர்மையாற் கண்டு பற்றிச் சென்றேன்; சிவனைக் கண்டு கொண்டேன். அப்பொழுது மேற்குறித்த அந்த விளக் -கின்றிச் செய்யும் சந்தியானுட்டானங்களும், அவ்வனுட்டானத்தில் செய்யப்படும் தியானங்களும் என்னையறியாமலேயே நீங்கிவிட்டன.Special Remark:
நடுவுத் தெரு, ஆறு ஆதாரங்களுள் மேலதான ஆஞ்ஞை. அங்குச் சிவன் தியானப் பொருளாய் விளங்கியே நிற்றலால், ``நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே`` என்றார்.யோகக் காட்சியைத் தருவது குண்டலினி சத்தியே. ஆகவே, குண்டலினி யோகத்தை மேற்கொள்ளாத நிலையை இருள் நிலையாக வைத்து, குண்டலினியை, ``சோதி`` என்கின்றவர், அது மூலாதாரத்தில் உள்ளபொழுது எழாது துயில் கொள்வதாய், மூலாக்கினியால் எழுப்பப்பட்ட பொழுது எழுந்து சுவாதிட்டானத்தைக் கடந்து, மணி பூரகத்தை அடைந்த பொழுதே விளக்கத்தைத் தருதலால் அவ் விடத்தில் விளங்குவதாக, ``உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியை`` என்றார். சோதி, இங்கு விளக்கு. அந்த விளக்குப் புறத்தே உள்ள கையால் பற்றப்பட்டது. அகத்தே அறிவால் பற்றப்படுவது ஆதலின், ``புந்தியினுள்ளே புணர்ந்து`` என்றும், விளக்குக் கிடைத்தலின் வெளியில் உள்ள பொருளை அடைதற்குத் தடையில்லாமை பற்றி, ``கொண்டேன்`` என்றார். கொள்ளுதல், கைப்பற்றுதல்.
யோகத் தியான சமாதிகளில் இருப்பவர்பால் கிரியானுட் டானங்களும், தியானங்களும் நிகழாதுபோதல் இயல்பேயன்றோ? அதனையே, ``சத்தி சமாதிகள் தாமே ஒழிந்தன`` என்றார். இதனுள் ``நான் ஒழிந்தேன்`` என்னாது, ``தாமே ஒழிந்தன`` என அருளிச் செய்ததை ஊன்றி உணர்தல் வேண்டும். யோக சித்தர்களும், ``நட்ட கல்லை தெய்வம் என்று`` என்னும் பாடல்போன்ற பல பாடல்களில் கிரியைகளை விலக்குதல் போலக் கூறியனயாவும், `கிரியையோடே நில்லாது யோகத்திற் செல்க` என அறிவுறுத்தியனவேயாம். அஃது அறியாதார், `கிரியைகள் பயன் இல் செயல்கள்` எனச் சித்தர்கள் கடிந்தொத்தினார்கள்` எனத்தாம் அறிந்தவாறே கூறித் தாமும் பயனை இழந்து, பிறரையும், இழப்பிப்பர்.
இதனால், `யோகத்தில் குண்டலினி யோகம் சிவனை விளக்கி நிற்கும், என்பது கூறப்பட்டது. அது `பிரணவ யோகம்` அல்லது `பிராசாத யோகம்` ஆம். ஹடயோகம் அதனைச் செய்யாது` என்பது கருத்து. எனவே, மோன சமாதிக்கு வாயிலாகிய யோகம் குண்டலினி யோகம்` என்னும் கருத்தினால் இம்மந்திரம் இவ்வதிகாரத்ததாயிற்று.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage