
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பதிகங்கள்

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும்அவ் வாறே.
English Meaning:
Transcendental Union Beyond Word and SpeechAs salt in water, in Lord I mixed,
Transcending Param and Paraparam states,
Beyond word and speech I in union merged;
``How was It?`` — you ask
``It was It`` — I say.
Tamil Meaning:
செப்பு பராபரம் - குரு மொழியும், வேதாகமங் -களும் சொல்லுகின்ற மெய்ப்பொருள். `பராற் பரம்` என்பது, `பராபரம்` என மருவிற்று. `மேலானதற்கும் மேலானது` என்பது அதன் பொருள்.Special Remark:
சேர்பரம் - முன்பு பரமாய் இல்லாது பராபரத்தைச் சேர்ந்ததனால் `பரம்` எனச் சொல்லப்படுவது. அஃது ஆன்மா.இவ்விரண்டையும் விடுதலாவது, சீவான்மா இது, பரமான்மா இது` எனப் பகுத்துக்காணும் நிலையை விடுவது. அஃதாவது, ஆன்மா `யான், எனது` என்னும் பகுத்துணர்வின், நீங்கியநிலை. `கப்புறுதல்` எனப்பட்டதும் அதுவே. கப்புறுதல் - கவர்த்தல்; இரண்டு படுதல்.
கப்பு உறு சொல் பதம் மாள - பகுத்துச் சொல்லும் சொல் நிலை நீங்க. கலந்தமை - சீவான்மா பரமான்மாவோடு ஒன்றுபட்ட நிலை.
`அப்பினில் உப்பென, அத்தென ஆன்மா அணைந்திட்டுக் கலந்தமை` என்க. `கலந்த நிலை எப்படி எனில; அஃது இப்படி - என இலக்கண வகையாற் கூறு வாராது - அப்படி எனப் பொதுவகையால் சுட்டும் தன்மையினதேயாம்` என்பது ஈற்றடியின் பொருள். இதன் முதல் மூன்றடிகளில் கூறப்பட்ட பொருளே சிவஞான போதத்துள்,
``நசித்து மலம் - அப்பணைந்த உப்பின் உளம் அணைந்து சேடமாம்;
கப்பின்றாம் ஈசன் கழல்``9
எனக் கூறப்பட்டமை காண்க.
இதனுள் பாடம் பெரிதும் திரிபுற்றது.
இதனால், `மோன சமாதியின்பம் அனுபவத்தால் அறியப் படுமன்றி, அயலவர் உரையால் அறிய வாராது` என்பது உணர்த்தப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage