
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
பதிகங்கள்

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையம்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மதி நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.
English Meaning:
Worldly Path is not True PathThere is a True Path for the Journey;
They that follow the swampy paths worldly
See but the mirage;
They that avoid the sorrowful path of swirling Karma
Cross evil safe;
And shall sure worship at Lord`s Feet.
Tamil Meaning:
பிறவிச்சுழலிலே கிடந்து எய்துகின்ற துன்பங்களை யெல்லாம் போக்கி, அதனால், அறிவுடையவர் பழிக்கும் பழியையும் போக்கிக்கொள்ள விரும்புவார்க்கு நிலத்திலே பயணம் செய்தல் போன்ற நல்லவழி ஒன்று உண்டு. அதைப் போற்றி அடைதல் அத்துன்பங்கள் நீங்கும் காலம் வரப்பெறாதோ ரெல்லாம் சுழிவழியே பயணம் செய்வோர் போலப் புறச் சமயிகள் கூறும் கற்பனை உரைகளை `மெய்` என்று கேட்டு அவற்றின்படியே நடப்பர்.Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, முதலடியில், ``வையம்`` என்பதனை முன் வைத்து, ``பரவலும் ஆம்`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``வையத்தின்கண் வழி நடக்கும்`` என்க. தரை வழியாகப் பயணம் செய்வோர் துன்பம் இன்றிக்குறித்த இடத்தை அடைதலும், சுழிவழியாகப் பயணம் செய்வோர் ஓரிடத்தும் தரையை அடையாவிடின் சுழன்று கொண்டே இருப்பவராதலும் அறிக. காலம், சத்தி நிபாதம் காலம், ``ஒன்று உண்டு`` எனக்கூறியொழிந்தமையால், `அஃது அருமறையாய், (அரிய இரகசியமாய்) தக்கார்க்கே உணர்த்தப் படுவது` என்னும் குறிப்பினதாயிற்று. அவ் ஒன்றாவது, சித்தாந்த சைவமாம்.இதனால், புறச் சமயங்கள் வெறும் சுழற்சியாய்ப் பயன் தாராது உலகரை மயக்கி நிற்பனவாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage