
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
பதிகங்கள்

உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.
English Meaning:
Definition of Truth PathHe is Light within you;
To know how to reach Him
Is True Path of Becoming;
If you know thus,
You know contradiction none;
That is Path Supreme, Your Goal`s End;
They are but folks poor in spirit
That know not merging in Light Divine.
Tamil Meaning:
அடையத்தக்க நல்ல நெறியை அறிய எழுகின்ற அறிவைச் சாருமாற்றை அறிந்துவிடுமாயின், பிழை யாதும் இல்லையாகும். ஆனால், அறிவில்லாத மக்கள், குற்றங்கள் யாவும் எரிந் தொழிதற்கு ஏதுவாம் நெருப்பாகிய அந்த அறிவினுள் புகுந்து தம் அல்லலை ஒழியுமாற்றை அறிகின்றார்களில்லை.Special Remark:
`அதனால், அவர்கள் புறநெறிகளிற் சென்று அல்லல் உறுகின்றார்கள்` என்பது குறிப்பெச்சம். ``அறிவது`` என்றது அறிவை. உம்மை சிறப்பு. அறுதற்கும், இறுதற்கும் வினை முதல்கள் வருவிக்கப்பட்டன.இதனால், புறச் சமயங்கள் மயக்க அறிவினை யுடையார்க்கு ஆவன ஆதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage