
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
பதிகங்கள்

சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவிஒன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை ஆமே.
English Meaning:
Path of Siva Leads to Final LiberationThe Path of Siva alone is the sole Path;
The Other paths but lead to earthly sorrows;
And sure birth in bondage returns to you;
Do you walk in the Holy Path
And when the One appears,
The triad Impurities that your destruction encompass
Will, of themselves, meet their own destruction.
Tamil Meaning:
சிவனது உலகத்தையும், சிவனையும் அடைவதே பிறவியற்ற முத்தியாம். அவையன்றி, `முத்தி` எனப் பிறராற் கூறப் படுவன எல்லாம் முத்தியல்லாத பிறப்பு நிலையேயாம். அதனால், அவைகளில் எல்லாம் பாசத்தால் வருகின்ற பிறவியாகிய ஒரு பெருந் துன்பம் இருக்கவே செய்யும். அதனால், சிவனை நோக்கிச் செய்யப் படுவனவாகிய சரியை முதலிய நெறிகள் ஒருவனுக்குக் கிடைக்கு மாயின், முத்தியுலகம் அல்லவாய்ப் பிறவி யுலகங்களாகிய `அயன், அரி, அரன்` என்னும் குணமூர்த்திகள் மூவரது பதவிகளும் அத் தன்மையவாய்ப் போம்.Special Remark:
அஃதாவது, `அவன் அப்பதவிகளை எய்தாது, மேற்கூறிய சாலோகம் முதலியவற்றையே அடைவான்` என்பதாம். ``கதி`` என்றது பத முத்தி பரமுத்திகளை. பத முத்தியடைந்தோரும், ``நாதனே முன் நிற்கின்``1 பரமுத்தியை அடைவர் ஆதலின், அதுவும் `பிறவியற்ற நிலை` எனப்பட்டது.ஒன்று - ஒன்றாய் பெரிய துன்பம். `உண்டே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல். தவகதி - தவமாகிய நெறி. தவமாவது சரியை முதலியனவே யாதல் அறிக. `அதனொடு நேர்தலாகிய ஒரு பேறு வாய்க்குமாயின்` என்க. ``மூவர்`` என்றது ஆகுபெயர்.
இதனால், அகச் சமயங்களை மேல்; `அண்ணலை நாடிய` சமயங்களாகக் கூறினமை பற்றி, அவையும் தவநெறிபோலும்` எனவும், அவற்றால் அடையும் நிலைகளும் `முத்திபோலும்` எனவும் நிகழும் ஐயம் அறுக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage