
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
பதிகங்கள்

பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழும்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.
English Meaning:
Precious is Hara`s PathThe Heavenly Lord, He knows our goal
He is tender-hearted;
He is the Effulgent Sun that guides the destiny
Of Heavenly Beings of wisdom great;
Do think of Him in thought unsullied;
He is of crystal pure hue;
Precious the path of Virtue
He for us has laid.
Tamil Meaning:
மாணவனே, உயிர்களது வினையின் தன்மைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அவைகளைப் படைப்புத் தொழிலிற் படுத்துகின்ற பிரமன், உயர்குணமாகிய `சத்துவ குணத்தை உடையன்` எனக் கூறப்படுகின்ற மாயோன். பகலவன், மக்களோடு படுத்து நோக்குங்கால் உயர்ந் தோராக எண்ணப்படுகின்ற இந்திரன் முதலிய தேவர்கள் இவர்களது பதவியில் விளங்க விருப்பும் உனது விருப்பம் அறும்படி நீதூய மாணிக்கம் போலும் நிறத்தை உடைய சிவனைநினை; ஏனெனில் அவன் அருளிச்செய்த சிவநெறி ஒன்றே அடைதற்கு அரிய நல்ல நெறியாகும்.Special Remark:
பெரிது, `பெரிசு` என மருவிற்று. அப்பண்புகொள் பெயர். `பெரும்பொருள்` என நின்று, உயர்வை யுடையாரைக் குறித்தது. அன்றி ஆகுபெயராய் நின்ற பண்புப் பெயர்` என்றலுமாம். `பெரிசாக` என ஆக்கம், வருவிக்க. ``திகழும்`` என்பது திகழ விரும்பும் காரணத்தின்மேல் நின்றது. `வண்ணனை, என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. அருமை, நிலையுடையதாதல் பற்றிக் கூறப்படுவது.இதனால், புறச்சமயங்கள் பிற தேவர்களது பதவிகளை நிலை யுடையனவாகக் கருதும் குற்றத்தைப் பயப்பனவாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage