ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ்
    ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம்
    ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
    ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.
  • 10. அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
    எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
    இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே
    இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம்.
  • 11. எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
    எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
    எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
    எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.
  • 12. அந்தமும் ஈறும் முதலா னவைஅற
    அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
    அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
    அந்தமும் இந்துகை ஆருட மானதே.
  • 13. ஆஇன மானவை முந்நூற் றறுபதும்
    ஆஇனம் அப்பதி னைந்தின மாய்உறும்
    ஆஇனம் அப்பதி னெட்டுட னாய்உறும்
    ஆஇனம் அக்கதி ரோன்வர வந்தே.
  • 14. வந்திடும் ஆகாச ஆறது நாழிகை
    வந்திடும் அக்கரம் முப்ப திராசியும்
    வந்திடும் நாளது முந்நூற் றறுபதும்
    வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே.
  • 15. அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
    கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம்
    தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
    இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.
  • 16. இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
    இராசியுட் சக்கரம் என்றறி விந்துவாம்
    இராசியுட் சக்கரம் நாதமும் ஒத்தபின்
    இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.
  • 17. நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம்
    நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
    நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
    நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.
  • 18. தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
    தாரகை மேலோர் தழைத்ததோர் பேரொளி
    தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
    தாரகை தாரகை தாரகை கண்டதே.
  • 19. கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
    கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
    கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின்
    கண்டிடும் அப்புறங் காரொளி யானதே.
  • 2. வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
    வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
    வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம்
    வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே.
  • 20. காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
    பாரொளி நீரொளி சாரொளி காலொளி
    வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
    நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.
  • 21. நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
    நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
    நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும்
    நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.
  • 22. விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
    விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம்
    விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில்
    விந்துவை எண்மடி கொண்டது வீசமே.
  • 23. வீசம் இரண்டுள நாதத் தெழுவன
    வீசமும் ஒன்று விரிந்திடும் மேலுற
    வீசமும் நாதம் எழுந்துடன் ஒத்தபின்
    வீசமும் விந்து விரிந்தது காணுமே.
  • 24. விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
    விரிந்தது விந்துவும் நாதத் தளவு
    விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில்
    விரிந்தது விந்து விதையது வாமே.
  • 25. விதையது விந்து விளைந்தன எல்லாம்
    விதையது விந்து விளைந்த உயிரும்
    விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம்
    விதையது விந்து விளைந்தவன் தாளே.
  • 26. விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம்
    விளைந்த எழுத்தவை சக்கர மாக
    விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
    விளைந்த எழுத்தவை மந்திர மாமே.
  • 27. மந்திரம் சக்கர மானவை சொல்லிடில்
    தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்
    தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை
    பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.
  • 28. உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
    பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
    தன்னிட்ட டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
    பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.
  • 29. பார்க்கலு மாகும் பகையறு சக்கரம்
    காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும்
    நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்
    ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.
  • 3. சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
    சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன
    சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச்
    சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே.
  • 30. அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து
    விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை
    பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும்
    குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.
  • 31. கூறிய சக்கரத் துள்எழு மந்திரம்
    ஆறியல் பாக அமைந்து விரிந்திடும்
    தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
    மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.
  • 32. மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
    மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும்
    மதித்தங் கெழுந்தவை மாரண மாகில்
    கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.
  • 33. கூடிய தம்பனம் மாரணம் வச்சியம்
    ஆடியல் பாக அமைந்து செறிந்தடும்
    பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
    தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே.
  • 34. தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே
    அளிந்த அகாரத்தை அந்நடு வாக்கிக்
    குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து
    அளிந்தவை அங்கெழும் ஆடிய காலே.
  • 35. காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
    ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப்
    பாலித் தெழுந்து பகையற நின்றபின்
    மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.
  • 36. கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
    பண்டைஉள் நாவில் பகையற விண்டபின்
    மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி
    என்றும் இதயத் தெழுந்து நமவே.
  • 4. மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும்
    மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
    மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின்
    மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே.
  • 5. ஞாலம தாக விரிந்தது சக்கரம்
    ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
    ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
    ஞாலம தாக விரிந்த எழுத்தே.
  • 6. விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
    விரிந்த எழுத்தது சக்கர மாக
    விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
    விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.
  • 7. அப்பது வாக விரிந்தது சக்கரம்
    அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும்
    அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ
    அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.
  • 8. ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
    ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
    ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
    ஆகாச அக்கரம் ஆவ தறிமினே.
  • 9. அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து
    அறிந்திடும் சக்கரம் நாத முதலா
    அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி ஓர்க்கும்
    அறிந்திடும் அப்பக லோன்நிலை ஆமே.