
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்த எழுத்தே.
English Meaning:
Cosmos Chakra Expanded into Five ElementsThe Earth Chakra expanded,
When the Bindu and Nada conjoint became
That Adhara (Muladhara) to immense distance lengthened,
As Earth the letters thus expanded.
Tamil Meaning:
ஏரொளிச் சக்கரம் பல உலகங்களாயும் அமையும் பெருமையது. அதில் உள்ள விந்து நாதங்களும் அன்ன. அதனால் அச்சக்கரத்தில் இருக்கும் எழுத்துக்களை அறிவுடையோர் சிவமேயாக எண்ணுதலில் தலைப்படுவர்.Special Remark:
`எழுத்தை அப்பதியாக யோசித்தலில் ஞாலம் ஆயிடும்` என்க. மூன்றாம் அடியில் ``ஞாலம்`` என்றது அறிவுடையோரை. இதனால், ஏரொளிச் சக்கரத்தின் எழுத்துக்களைச் சிவமாக எண்ணுதல் வலியுறுத்தப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage