
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம்
விளைந்த எழுத்தவை சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.
English Meaning:
Fifty Letters Evolved From Bindu and NadaFrom Bindu and Nada evolved the letters
From the letters was Chakra formed,
The letters and Chakras within the Body stand
The letters verily are the mantras true.
Tamil Meaning:
காரணகாரியங்கட்கு உள்ள ஒற்றுமையால் விந்து நாதங்களின் காரியமாகிய எழுத்துக்கள் பலவும் விந்து நாதங் களாகவே கொள்ளப்படும். அத்தன்மையவான எழுத்துக்களாலே எல்லாச் சக்கரங்களும் அமைதலின், அச்சக்கரத் தியானத்தால் அவை உடம்பினுள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நின்று உடம்பை யும் விந்து நாதமயமாக்கி, ஆன்மாவையும் மந்திரான்மாவாகச் செய்யும்; அஃது எவ்வாறெனில் எழுத்துக்கள்தாமே மந்திரமாய் உருப் பெறுதலின்.Special Remark:
`நாதமும்` என்னும் எண்ணும்மையைத் தொகாது வைத்தோதுதல் பாடம் அன்று. ``ஆக`` என்ற வினையெச்சம் காரணப்பொருளில் வந்தது. `தியானத்தால்` என்பது ஆற்றலால் வந்தது. ``நிற்கும்`` என்பது, தன் காரியத்தையும் தோற்றுவித்துநின்றது. ஈற்றில் `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. சக்கரங்களின் இயல்பாகப் பொதுப்படக் கூறினாராயினும், சிறப்புடைய இவ் ஏரொளிச் சக்கரத்தின் இயல்பு உணர்த்துதலே கருத்து.இதனால், இச்சக்கரத்தால் எய்தும் பயன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage