
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.
English Meaning:
That Flame Pervaded the Five ElementsThat Blue Light enveloped universe all,
It became light of earth, water, fire, wind and sky,
Thus as it flamed and rose together,
As One Divine Light is pervaded everywhere.
Tamil Meaning:
யோக முதிர்ச்சியில் நீல ஒளியாய்க் காணப்படும் சத்திஒளி பூதாகாயத்தின் மேற்பட்ட பராகாயமாய் உலகத்தைத் தன்னுட் கொண்டு பரந்து நிற்றலாலே ஐம்பெரும் பூதங்கள் முதலிய பொருள்கள் பலவும் பயன் தரும் பொருளாய்ச் சிறந்து விளங்கு கின்றன. அச்சத்தி ஒளியூடே அதனினும் நுண்ணிய சிவமாகிய மெய்ப் பொருள் ஒன்றுபட்டு அச்சத்தி ஒளி உள்ள பொருள்களில் எல்லாம் தானும் உடன் நிறைந்து நிற்கின்றது.Special Remark:
`அதனை மறத்தல் கூடாது` என்பது குறிப்பெச்சம். அண்டம் - ஆகாயம். `அண்டமாய்` என ஆக்கம் விரிக்க. பொதிந்து - பொதிதலால். `உலகெங்கும் பொதிந்து` என மாற்றுக. விளக்கத்தையே இங்கு, `ஒளி` எனப் பன்முறையும் ஓதினார். சார் - யாதானும் ஒன்றைப் பற்றியே நிற்பதாகிய நெருப்பு. நேர்மை - நுண்மை. மூன்றாம் அடி உயி ரெதுகை.இதனால், மேற்கூறிய சத்தி ஒளியது சிறப்பும், அதனோடு உடனிலையாய் நிற்பதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage