
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின்
மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே.
English Meaning:
Earth ChakraBindu letter conjoining Nada Letter
Together fill Muladhara
When Conjoint Letters are thus repeated
They form Earth Chakra.
Tamil Meaning:
உயிரெழுத்துக்களின் ஈற்றில் ஓதப்படும் விந்து வாகிய `அம்` என்பது தனிஓர் எழுத்தாய் நிற்பினும், அகரம் முதலிய பிற உயிர்களோடு கூடி நிற்றலும் உடைத்து, முடிவில் உள்ள நாதமாகிய `அ;` என்பதும் அத்தன்மையது. சக்கரங்களில் முதற்கண் உள்ள அறையில் எந்த எழுத்து உள்ளதோ, அந்த எழுத்துக்குரிய கலையின் சக்கரம் அதுவாகும். அவ்விடத்து அச்சக்கரம் அக்கலைக்குரிய பிண்டமாதலேயன்றி அண்டமாயும் விளங்கும்.Special Remark:
``அவ்வெழுத்து`` மேற்சொல்லப்பட்ட கலைக்குரிய எழுத்து, அவை பின்னர் அறியப்படும். `சக்கரமே ஞாலமாய் வரும்` என மாற்றிக் கொள்க.இதனால், ஏரொளிச்சக்கர எழுத்துக்கள் சிலவற்றின் இயல்பு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage