
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

மந்திரம் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்
தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை
பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.
English Meaning:
Pranava is the Mantra Supreme with its Seat in Eye-Brow CentreTo speak of mantras and Chakras
There it is one like the circle of fire,
The Tantras glorify;
Meditate on Pranava that is in the Eye-Brow Centre
Through the Tantras reached;
No more thine bondage is.
Tamil Meaning:
`மந்திரம், சக்கரம்` என்பவற்றின் உண்மையைச் சொல்லுமிடத்து, அவைகளைக்கூறும் நூல்களின் கருத்து, `நாதமாகிய உண்மை எழுத்து ஒன்றே சோதி மண்டலமாம்` என்பதே. ஆகையால், அவ்வுண்மை எழுத்துக்களை உணர்த்தும் கருவிகளாகிய ஆகாய ஒலியையும், அதற்கு அறிகுறியாய் உள்ள வரிவடிவத்தையும் மிகச் சிறப்பித்துக் கூறும் அந்நூன்மொழிகள் முகமனாய் (உபசாரமாய்) அமைவனவே. இதனை, உணர்ந்து பரமபந்தமாய் உள்ள பிரணவத்தைத் தியானிப்பாயாக.Special Remark:
`தியானிப்பின் அது வேறாய்ப் புலப்பட்டுப் பந்தியா தொழியும்` என்பது கருத்து. உள் எழுத்து - உண்மையெழுத்து. அதனை ``ஒன்று`` என்றது வகைபற்றி. ``ஒன்றே`` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. வரிவடிவைக் கூறவே, அவற்றால் அறியப்படும் ஒலிவடிவும் பெறப்பட்டது. ``ஒன்றில்லை`` என்றது, `உண்மை ஒன்றில்லை` என்றதாய், உபசாரமாதலை உணர்த்திற்று. ஒன்று - சிறிது. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தல் பெற்றது. ``இல்லை`` என்பதன்பின் `ஆதலின்` என்பது எஞ்சி நின்றது.இதனால், மந்திரம், சக்கரம் என்பவற்றது உண்மை கூறிப் பிரணவத் தியானம் வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage