
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

விதையது விந்து விளைந்தன எல்லாம்
விதையது விந்து விளைந்த உயிரும்
விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம்
விதையது விந்து விளைந்தவன் தாளே.
English Meaning:
From Bindu-Seed Bija Evolved AllFrom the Bindu-Seed Bija arose all,
From the Bindu-Seed arose all life
From the Bindu-Seed arose this world,
From Lord`s Feet (Nada) arose Bindu-Seed.
Tamil Meaning:
சுத்த மாயை முதனிலையாக நிற்பவே பலவகை உலகங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், சவிகற்ப ஞானமும் உளவாவன. ஆயினும் அவை அங்ஙனம் உளவாதல் அம்மாயை சிவசத்தியை நிலைக்களமாகக் கொள்ளுதலாலேயாம்.Special Remark:
நான்கிடத்தும், `விந்து விதையதுவாகவே` என மாற்றி ஆக்கமும், தேற்றேகாரமும் விரித்துரைக்க. ``உயிர்`` என்றது அவற்றின் பிறப்பாகிய உடம்பை. சவிகற்ப ஞானம் உண்டாதல் சொல்லுலகத்தாலாம். ஈற்றடியில், `விளைந்த` என்னும் வினைப்பெயர் அகரம் தொகுத்தலாயிற்று. அப்பெயர் அத்தொழில் மேல் நின்றது. `அவன் தாட்கண்ணேயாய்` என இறுதியில் உருபும், ஆக்கமும் விரிக்க.இதனால், மேலவற்றைப் பிறவாற்றால் வலியுறுத்தி, சுத்த மாயை முதனிலையாதல் சுதந்திரமாய் அன்று; சிவசத்தியின் வழியே யாம் என்பது உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage