
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.
English Meaning:
The 144 Letters of the Radiant ChakraThe Letters of Chakra radiant are a hundred and forty four
The Letters are but the Six Letter Mantra
Whose Central Letter Va to Fire belongs
That Letter central as radiant Fire flames
Thus are the Letters Six, first and last.
Tamil Meaning:
ஏரொளிச் சக்கரத்தில் அடைக்கப்படும் எழுத்துக் கள் நூற்று நாற்பத்து நான்கும் மந்திர கலை உளப்பட ஆறு வட்டங் களில் நிற்பனவாம். அவ் ஆறுவட்டங்களின் நடுவே அமைந்த இடமே ஏரொளிச் சக்கரத்தின் நடுவிடமாக, அவ்விடத்திலே முதற்கண் (1238) கூறிய வன்னி பீசமாகிய `ஓம் ரம்` என்பதுபொறிக்கப்படும். அவ் விடத்து நிற்கும் பிரணவமும், பீசமுமாகிய அவையே சிவசோதி சொரூபமாய் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அனைத்து எழுத்துக் களிலும் தனது ஆற்றலால் வியாபித்து நிற்கும்.Special Remark:
முதற்றொட்டு இதுகாறும் கூறிவந்த ஏரொளிச் சக்கரத் தின் முழு வடிவம் இங்குத் தனியாகக் கொடுக்கப் பட்டிருத்தல் காண்க.இதனால், ஏரொளிச் சக்கரத்தின் ஒளி எழுத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage