
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம்
நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.
English Meaning:
Formation of Taraka Stellar ChakraThe Bindu letters with Nada letters arise,
When in each Adhara the appropriate letters
Bindu and Nada carry out are placed,
Then the Taraka (Stellar) Chakra appears!
Tamil Meaning:
தம்மை அடுத்து நிற்கும் எழுத்துக் காரணமாகத் தாமும் விந்துவாய் நிற்கின்ற, ஏரொளிச் சக்கர எழுத்துக்கள், அன்ன காரணத்தானே நாதமாயும் நிற்கும். அவ்வெழுத்துக்களை அங்ஙனம் தியானித்தலில் சிறிதும் திரியாது நிற்பின், அந்நிலையின்பின் மேற்கூறிய ஒளிக்காட்சி விண்மீன்போலப் புலப்படும்.Special Remark:
`உயிரெழுத்துப் பதினாறனுள் ஈற்றில் நிற்கும் இரண் டெழுத்துக்கள் முறையே விந்து நாதங்களாய் நிற்கும்` என்பது முன்பே கூறப்பட்டது. அவற்றைத் தங்கீழ்ப் பெற்றவழி ஏனை உயிரெழுத் துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் எல்லாம் அங்ஙனமே விந்துவும், நாதமுமாய் நிற்கும் என்பதை இங்கு முதல் இரண்டு அடிகளில் எடுத் தோதினார். இரண்டாம் அடியின் பொருள், `நாதம் ஓங்கும் எழுத்துடன் (கூடி) அதுவாயும் நின்றிடும்` என்பதாம். நின்றிடும் அப்பதி - மனம் நிலைபெற்று நிற்கின்ற அந்த அறைகளில். அவ் வெழுத்தே வருதல், அந்த எழுத்தே தியானிக்கப்படுவனவாய் நிகழ்தல். நின்றிடும் அப்புறம் - நிற்கும் அந்நிலைக்குப்பின் `ஆகும்` எனற்பாலது, தெளிவு பற்றி, ``ஆனது`` எனப்பட்டது. ஒலியனுபவம், ஒளியனுபவம் இரண்டுமே நிகழுமாயினும் பரியதாய் முதற்கண் நிகழும் ஒளி யனுபவத்தையே சிறந்தெடுத்து ஓதினாராதலின், ஒலி யனுபவத்தை விலக்கிற்றிலர் என்க.இதனால், மேற்கூறிய பயன்களுள் ஒன்றன் நிலை வகுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage