
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை
பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும்
குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.
English Meaning:
Siva`s Letter and Sakti`s Letter in Pranava ChakraFor the Chakra, thus said
First letter is ``A`` of Siva
The letter next is of Sakti, ``U``
The Chakra is the earth, fire and the rest of elements four,
Of the Chakra thus formed, more can be said.
Tamil Meaning:
ஏரொளிச்சக்கரத்தில் உள்ள எழுத்துக்கள் மேல் ``அம் முதல் ஆறும்`` என்னும் மந்திரத்தில் (1247) கூறியபடி முதலில் ஆறும், ஈற்றில் ஆறும், இடையில் நான்கும் ஆகிய எழுத்துக்கள் முறையே `சிவன், சத்தி, அக்கினி` என்னும் மூவருக்கும் உரியன ஆதலின், அவை முத்திறமும் கூடிநிற்கும் இச்சக்கரத்தின் பெருமை சொல்லில் அடங்குவதோ!Special Remark:
`நாலும் அங்கி; பார்` என மாற்றி இருதொடராக்கி உரைக்க. ``நாலும்`` என்றது `மேற்கூறியவாறு` என நினைவுறுத்திய வாறு.இதனால், இச்சக்கரத்தின் பெருஞ்சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage