
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
பதிகங்கள்

வந்த மரகத மாணிக்க ரேகைபோய்ச்
சந்தித் திடும்மொழி சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுட் சோதியும் ஆமே.
English Meaning:
Holy Guru Shows the Light in Eye-Brow CentreLike a lustrous ray of red gem
On to a green stone set
Is the Holy Guru`s Jnana precept;
That ray in the eye-brow Centre is;
It is the Light within the Light Resplendent.
Tamil Meaning:
ஞான குரு காட்டும் ஞானநெறி, அன்று அயன் மால் தேடும்படி வந்த, மரகது மணியொளிவும் மாணிக்க மணி யொளியும் சேர்ந்த ஓர் ஒளிவடிவை அடையும் உபதேச மொழியே யாம். அந்தமொழியின் பொருளே மூக்கின் அடி இடமாகிய புருவ நடுவில், ஆன்மாவின் அறிவினுள் அறிவாகத் தியானிக்கப்படும் ஒளியுமாகும்.Special Remark:
``மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத்
திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்``3
என்பதனால், அயன், மால் இவர்கட்டுமுன் ஒளிவடிவம் பச்சை நிறமும், செம்மை நிறமும் விரவிய ஒளியாய் இருந்தமை அறியப்படும் முதற்பொருள் `சத்தி, சிவம்` என இருதிறப்பட்டு இயைந்து நிற்றலை இந்நிறங்கள் குறிக்கும்.
``அழகாயும், மெய்ம்மையாயும் உள்ளவனும்,
பரப்பிரம்மம் - என்று பேசப்படுபவனும்,
உயிரினுள் இருப்பவனும், கருமை நிறமும்,
பொன்னிறமும் கலந்த உருவத்தை உடையவனும்,
மேல்நோக்கி பாயும் வீரியத்தை உடையவனும்,
மாறுபட்ட கண்களை யுடையவனும்,
உலகத்தைத் தன் வடிவமாகக் கொண்டவனும்
ஆகிய அவனுக்கு வணக்கம்! வணக்கம்!!*
என வேதமும் கூறிற்று. இரேகை - ஒளி. ``எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய``* என்பது பற்றித் தொகைச் சொல் இடையில் ரகர லகர முதல் ஆரியச் சொற்கள் முதற்கண் அகர இகர உகரங்களில் யாதும் பெறாது வருதலைக் `குற்றம்` என்றல் இல்லை. அதனால் ``மாணிக்க ரேகை`` என்றே வந்தது. ``மரகத மாணிக்க ரேகை`` என்னும் மும்மொழித் தொகைச் சொல் முதல் இருமொழிகள் உம்மைத் தொகையாய்ப் பின்பு `ரேகை` என்பதனோடு ஆறாம் வேற்றுமைத் தொகையாய்த் தொக்குப் பின்பு விடாத ஆகுபெயராய், அவற்றையுடைய ஓர் ஒளியைக் குறித்தது` ``வந்த`` என்பது, அயன், மால் இவர்முன் வந்த` என ஆற்றலாற் பொருள் தந்தது. `ரகையைச் சந்தித்திடும்` என இயையும். இவ்விரேகையை, ``சிவ`` என்னும் மந்திரம் உணர்த்து -மாறும், அதுவே உபதேசம் ஆமாறும் உணர்க. ``மூலம்`` என்றதை, `நாசியின் மூலம்` எனக் கொள்க. சுத்தான்ம அறிவை, ``சுந்தரச் சோதி`` என்றார்.
இதனால், ஞான குரு உபதேசம் பரசிவத் தியானத்தை உணர்த்திப் பயன் பெறச் செய்தல் கூறும் முகத்தால், அவரது தரிசனச் சிறப்பு உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage