
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
பதிகங்கள்

நகழ்வொழிந் தார்அவர் நாதனை உள்கி
நிகழ்வொழிந் தார்எம் பிரானொடுங் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தியனுள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.
English Meaning:
How Lord Enters WithinThinking of Lord
Their inconstancy lost;
Uniting in Lord
Their existence lost;
In their thoughts
Their ego lost;
Thus he entered
Showing the Way Illumined.
Tamil Meaning:
`யான், எனது` தன்முனைப்புக் கொண்டு தருக்குதலை ஒழிந்து, `எல்லாம் அவனே` என்று அடங்கி யிருப்பவர்களது அறிவினுள்ளே சிவன் நின்று எல்லாக்கலைகளாலும் புகழப்படுகின்ற தனது திருவருள் நெறியையே விளக்கி நிற்பான். அதனால், அவர்கள் அவனையே அறிந்து நிற்றலால் அத்திருவருள் நெறியைவிட்டு அப்பால் நகர்தல் இல்லை. மற்றும் அவனிடத்திலே அழுந்தி நிற்றலால் பிறவிக்குரிய நெறியில் சென்று பிறப்பதில்லை.Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. நகழ்வு - நகர்வு. திகழ்வொழிந்தாரைச் சுட்டுவதாகிய ``அவர்`` என்னும் சுட்டுப் பெயர் செய்யுளாகலின் முன் வந்தது. `நாதனை உள்கி நகழ் வொழிந்தார்; எம்பிரானொடுங் கூடி நிகழ்வொழிந்தார்` என்க. ``உள்கி, கூடி`` என்னும்`` செய்திகள் எச்சங்கள் காரணப் பொருளாவாய் நின்றன. (கற்றுப் பெரியன் ஆயினாள் என்பதிற் போல`. ``காட்டிப் புகுந்து நின்றான்`` என்பதை, `புகுந்து காட்டி நின்றான்` எனப் பின்முன்னாக வைத்துரைக்க.இதனால், `ஞான குரவர் ஏனையோர் போலவாரல்லர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage